பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 விந்தன்

‘கற்பு, கற்பு என்று இன்னமும் நாம் கதைத்துக் கொண்டிருக்க வேண்டாம் என்கிறேன்; அதை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஆண் வர்க்கம் நம்மையும் ஒரு ‘விளையாட்டுப் பொருளாகக் கருதி, விளையாடும் வரை விளையாடிவிட்டு வீசி எறியவும் வேண்டாம் என்கிறேன்!”

‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எனக்குப் புரிய வில்லையே, அம்மா!’

‘சரி; புரியும்படியாகவே சொல்கிறேன் - நீ அந்தப் பேராசிரியனை மறந்து, ராமமூர்த்தியைக் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும்!”

‘நடக்காத காரியம்; நடக்கவே நடக்காத காரியம்!”

‘நீ, அவரைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறாய்! பேராசிரியர் அனுபவித்த கவிதையை வேண்டுமானால் நானும் அனுபவிக்கலாம்; அவர் அனுபவித்தப் பெண்ணை நானும் அனுபவிக்கமுடியுமா? என்று அன்றைக்கு அவர் சொன்னதை வைத்துக்கொண்டு நீ அப்படி நினைக்கிறாய்...’

‘இதை யார் உங்களுக்குச் சொன்னது?”

‘அவரேதான் சொன்னார்; தமிழர்களில் பெரும்பாலோர் இன்று மானங்கெட்டு கிடக்கிறார் களென்றும், யாராவது ஒருவர் அவர்களுடைய மானத்தை வாங்காதவரை தங்களுக்கும் மானம் என்று ஒன்று இருப்பதே அவர்களுடைய நினைவுக்கு வருவதில்லை யென்றும், அதற்காகவே அன்று தான் அவ்வாறு சொன்னதாகவும் அவரேதான் சொன்னார். ஆனால் அந்த மானம் கற்பென்னும் கட்டுக்கதையை மட்டுமே கட்டிக் கொண்டு அழுவதைத் தான் விரும்பவில்லை யென்றும், நறுமணம் விரும்பினால் அவளைத் தான் திருமணம் செய்துகொள்ளத் தயாராயிருப்பதாகவும் கூட அவரேதான்