பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 187

இப்போது நீ என்ன சொல்கிறாய்? - வாழப் போகிறாயா, சாகப் போகிறாயா? உன்னுடைய விருப்பம்போல் செய்; நான் குறுக்கே நிற்கவில்லை!

இப்படிக்கு, கால வித்தியாசத்தால் உனக்குத் தற்காலத் தாயாராயில்லா விட்டாலும் கற்காலத் தாயாராகி விட்ட

கண்ணகியம்மாள்.’ இதைப்படித்த பிறகு வாழ்வாவது, சாவாவது? - ஒன்றும் புரியவில்லை, எனக்கு குழப்பம்; ஒரே குழப்பம். இந்தக் குழப்பத்துக்கு இடையில்தான் இன்னொரு செய்தி என்காதில் விழுந்தது. அதாவது ‘கண்ணகியம்மையார் திடீரென்று மாரடைப்பினால் காலமானார்கள் என்ற

செய்தி!

பேராசிரியரைப்பற்றி நன்கு தெரிந்த நான் என்னமோ இந்தச் செய்தியை நம்பவில்லைதான் - ஆனால் உலகம்? இன்னமும் அன்னாருக்குப் பூமாலையோடு பாமாலையும் பாடிச் சூட்டி மகிழ்ந்து கொண்டுதானே இருக்கிறது?

<> <> <>

‘இப்படித்தான் என்னை வாழவைக்கவேண்டும்’ என்று உறுதி பூண்டிருந்த என் அண்ணா, என்னால் இந்த உலகத்தில் வாழவே லாயக்கில்லாமல் போன பிறகு, எப்படியாவது என்னை வாழவைத்துவிடவேண்டும்’ என்று முயன்ற ஜீவன்கள் இரண்டு. அவற்றில் ஒன்று கண்ணகி அம்மையார்; இன்னொன்று என் பாட்டி!

கண்ணகி அம்மையாரோ என்னை வாழ வைப்பதற்காக என்னுடைய ஆத்மாவை மட்டுமேக் கொல்லமுயன்றார்கள்; அருமைப்பாட்டியோ என்னை