பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 193

அந்த நாயைப் போல் நான் படிக்கவில்லையல்லவா, அதற்காக மகிழ்ச்சியடைகிறேன் என்றேன்!”

‘நீங்கள் சொல்வதைப் பார்த்தால் படிக்காதவர்கள் குற்றமே செய்வதில்லை என்று சொல்வது போலல்லவா இருக்கிறது?’ என்றார் சீர்திருத்தவாதி, தான் படித்தவர்’ என்பதைச் சற்றே நினைவுறுத்துவதற்காக.

‘செய்கிறார்கள்; ஆனால் தண்டனையிலிருந்து தப்ப அவர்களால் முடிவதில்லை. இந்தப் படித்த படவாப் பயல்கள்தானம்மா, அதிலிருந்துத் தப்பிவிடுகிறார்கள்! - இருக்கட்டும் இருக்கட்டும்; எல்லாவற்றுக்கும் அவன் ஒருவன் இல்லையா? அவனுடைய தண்டனையிலிருந்து கூடவா இவர்கள் தப்பிவிடப்போகிறார்கள்?”

‘அது அங்கேதானே, அப்போது பார்த்துக் கொண்டால் போச்சு என்ற அந்த நாயைப் போன்றவர்கள் துணிந்து விடுகிறார்கள்!’ என்றாள் தாழம்பூ வானத்தைச் சுட்டிக் காட்டி. ‘'அங்கே ஒன்றுமில்லை; எல்லாம் இங்கேதான். அதுவரை மனிதன் பொறுக்கவேண்டும்; அவ்வளவே!’ என்றான் கிழவன், தான் அமர்ந்திருந்த தரையை ஒருமுறைக்கு இருமுறையாகத் தட்டிக்காட்டி.

7. மனிதன் மாறவில்லை!

அன்றிரவு வீடு திரும்பிய ராமமூர்த்தி குழந்தையின் அழுகுரலை மறுபடியும் அந்த வீட்டில் கேட்டதும், “விசாலம் குழந்தையை வீட்டுக்குக் கொண்டுப் போக வில்லையா?’ என்று கேட்டான்.

‘அவளுடைய குழந்தையாயிருந்தால்தானே அதைத் தன் வீட்டுக்குக் கொண்டு போக!’ என்றாள் கல்யாணி, அவனைத் தன் கடைக்கண்ணால் பார்த்துக் கணிக்க முயன்றுகொண்டே. “ஓஹோ’ என்று தலையை ஆட்டிக்

ம.மா - 13