பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 வித்தன்

கொண்டே அதுவரைதான் போட்டுக் கொண்டிருந்த ‘விரிவுரையாளர் வேடத்தைக் களைந்து விட்டுக் ‘கிரகஸ்தர் வேடத்தைத் தரித்துக்கொண்டான் ராமமூர்த்தி. கல்யாணி, ‘கன கச்சிதம் என்றாள் சிரித்துக் கொண்டே.

‘எதைச் சொல்கிறாய்? என்றான் ராமமூர்த்தி.

‘நேரத்துக்குத் தகுந்தாற்போல் நீங்கள் போடும் வேடத்தை’

‘அதற்காக வேளைக்குத் தகுந்தாற்போல் நான் பேசுவேன் என்று நீ நினைத்துவிடாதே!’

‘நேற்றுவரை அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந் தேன்; இன்று...’

‘அதை மறந்துவிடு; மறக்கமுடியாவிட்டால் மன்னித்து விடு!’

‘எதை, யாரை?”

‘என்னை, நான் சொன்னதை’

‘சொன்னதை வேண்டுமானால் மறந்துவிடுகிறேன். ஆனால் மனைவியை மன்னிக்கும் தகுதி ‘உலகஅநீதிப்படி கணவனுக்கு வேண்டுமானால் உண்டு; கணவனை மன்னிக்கும்தகுதி மனைவிக்கு உண்டா?”

‘அந்தப் பேதத்துக்கு இங்கே இடமில்லை!” என்று தன் இதயம் இருக்கும் இடத்தை அவளுக்குச் கட்டிக்காட்டி விட்டு, ‘முதலில் நீ எனக்குச் சோற்றைப் போடு; பசிக்கிறது!” என்றான் அவன், கைகால் அலம்பக் குழாயடியை நோக்கிச் சென்றுக் கொண்டே. சாப்பிட்டு முடிந்ததும் வெற்றிலைக் கட்டுடன் இருவரும் மொட்டைமாடிக்கு வந்தார்கள்.

‘இன்று ஏன் இவ்வளவு நேரம்?’ என்றாள் கல்யாணி. ‘'என்னத்தைச் சொல்வது, போ! எல்லாம்