பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 விந்தன்

‘ஐயோ, பாவம் குரங்கைக் கண்டால் மட்டும் அவருக்குப் பிடிக்காதோ?”

‘பிடிக்காது!”

‘ஒருவேளை அது ஏக பத்தினிவிரதத்தை அனுஷ்டிக்கும் ஜந்துவாயிருக்குமோ?”

‘சேச்சே, இருந்த ஒரே ஒரு பத்தினியையும் இழந்து விட்டு, இப்போது ஒரு பத்தினியும் இல்லாதவர் அவர்; அவரால் எப்படி ஏகபத்தினிவிரதத்தை அனுஷ்டிக்க முடியும்?’

‘அதற்காக ஊர் முழுவதுமா பத்தினிமாரைத் தேடிக் கொண்டிருப்பார்கள்?”

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பதுதமிழ் மரபல்லவா? அந்த மரபையொட்டி...”

‘நறுமணத்தின் தலையிலும் கையை வைத்துவிட்டார் போலிருக்கிறது!”

“அந்தக் கதையை யார் சொன்னது, உன்னிடம்?”

‘எல்லாம் விசாலம்தான் சொன்னாள் அத்தனை அக்கிரமங்களும் நடக்க இந்த வீட்டு மாடியிலேயே நீங்கள் அவருக்கு இடம் கொடுத்து வைத்திருந்ததால்தான் ஒரு நாள் அவர் விசாலத்தைக்கூடக் குளித்துவிட்டு வரச் சொன்னாராம் அந்த மாதிரியெல்லாம் இன்னொரு தடவை என்னிடம் சொல்லாதீர்கள்: நான் விளக்குமாற்றுக்கு வேலை கொடுத்து விடுவேன்’ என்று அவரை எச்சரித்து வைத்தாளாம்!’

‘ஒகோ அதனால்தான் அவளை வேலையிலிருந்து நீக்கிவிடவேண்டும், வேலையிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்று அவர் அடிக்கடி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார் போலிருக்கிறது! - சரி, தொலையட்டும் -