பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 17

‘எதைச் சொல்கிறாய்?”

‘இதைத்தான்!’ என்று அவன் கையிலிருந்த கோட்டை வாங்கிக்கொண்டு, கால் சட்டையை எடுத்து அவனிடம் கொடுத்தாள் கல்யாணி.

அவன் அதை மாட்டிக் கொண்ட பின் கோட்டைத் தானே போட்டு விட்டுவிட்டு, பூட் டை எடுத்தாள் கால்களில் மாட்ட.

‘'வேண்டாம், கல்யாணி! என்மேல் நீ கொண்டிருக்கும் அன்பை இப்படியெல்லாம் காட்ட வேண்டாம்!”

‘பின் எப்படிக் காட்டுவதாம்?” ராமமூர்த்தி சிரித்தான்; சிரித்துவிட்டுச் சொன்னான்:

‘பணிவிடைகளைக் கொண்டும், பரிசுப் பொருட்களைக் கொண்டும் நாம் அன்பைக் காட்ட வில்லை; ஒருவரை ஒருவர் ஏமாற்ற முயல்கிறோம்!’

‘சரிதான், உங்களை நான் ஏமாற்ற முயல்கிறேனாக்கும்?”

‘உனக்காகச் சொல்லவில்லை கல்யாணி, உலகத்துக் காகச் சொல்கிறேன்; உண்மையான அன்பு உள்ளத்தில் சுரக்கும்போது, அது தன்னை இனம் காட்ட என்ன செய்ய வேண்டுமோ அதைத் தானாகவே செய்யும். அதுதான் இயற்கை; மற்றதெல்லாம் செயற்கை!”

எவ்வளவு பெரிய உண்மை! இவ்வளவு ஆழ்ந்த சிந்தனை உள்ள இவரா அப்படியெல்லாம் செய் திருக்கப் போகிறார்? - கல்யாணியின் உள்ளம் குழம்பிற்று. அவர் எப்போது கலாசாலைக்குப் போவார், எப்போது கடிதத்தைப் படிப்போம்?’ என்று துடியாய்த் துடித்தாள்.

1D. udm – 2