பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 199

‘அவை மட்டுமல்ல; அந்த ஒரு பெண்ணுக்காக அவர் ஒரு கொலைக்கு இருகொலையாகச் செய்திருக்கிறார் என்றுகூட உன் நறுமணம் நினைத்துக் கொண்டிருக்கிறாள்! - அதுவும் தவறு - தன்னைக் கல்யாணம் செய்துகொண்ட பிறகு தன்மனைவி இன்னொருவனுடன் கள்ள நட்புக் கொண்டிருக்கிறாள் என்று சந்தேகித்து, அந்த சந்தேகத்தால் எழுந்த அவமானத்தால் தன்னைத்தானே தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் கண்ணகி அம்மையாரின் கணவர்; தன்மேல் கொண்ட ஆசையால் தன்னுடையக் கணவரை என் குருநாதர்தான் கொன்று விட்டார் என்று சந்தேகங்கொண்டு, அவரைக் கொலை காரனாக்கி யிருக்கிறாள் கண்ணகி அம்மையார்.

சந்தர்ப்ப தோஷத்தால் தன் மேல் சாட்டப்பட்டு விட்டக் கொலைக் குற்றத்தின் காரணமாக அமைதி குலைந்து, குலைந்த அமைதியை ஓரளவாவது நிலை நிறுத்தும் என்ற நம்பிக்கையில் குடிகாரனாகி, தான் குடிகாரனானால் போதாதென்று தன்மேல் அநியாயமாகக் குற்றம் சாட்டிய அம்மையாரையும் குடிகாரியாக்கி யிருக்கிறார் என் குருநாதர்.

அந்தக்குடியில் அறிவிழந்த இருவரும் முறை தவறி நடந்து, அதன் விளைவால் ஒருவரைக்கண்டு ஒருவர் பயந்து, அந்தப்பயத்தால் ‘யாரை, யார் முதலில் ஒழிப்பது?’ என்ற பயங்கரநிலைக்கு உள்ளாகி விட்டிருக்கிறார்கள் இருவரும். இந்த நிலையில், அவர்களுடைய வாழ்க்கையிலே எதிர்பாராத விதமாக குறுக்கிட்ட நறுமணம் தன் அழகால் என் அருமைக் குரு நாதரின் காதலையும், அந்தக்காதல் தந்தப் பரிசால் தனக்கேற்பட்ட அவல நிலையைக் கொண்டு அம்மையாரின் அனுதாபத்தையும்பெற்றிருக்கிறாள்.

அதன் காரணமாகத் தன்னைத்தானே தாயாக்கிக் கொண்டு, அவளைத் தன் சேயாக்கிக் கொண்டுவிட்ட