பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 விந்தன்

அம்மையார், என் குருநாதரை அவளுக்கு எப்படியாவதுக் கல்யாணம் செய்துவைத்துவிட வேண்டுமென்று முயன்றிருக்கிறாள். அதை விரும்பாத என் குருநாதர், மேனகைக்கு எதிர்த்தாற்போல் நின்ற விசுவாமித்திரர் போல் நிற்கவே, ஆத்திரமடைந்த அம்மையார் அவரைப் போலீசாரிடம் ஒப்படைப்பதற்கு வேண்டிய முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறாள்.

நிலைமை மிஞ்சிப் போனதை அறிந்த என் குருநாதர் அதைச் சமாளிக்க தன்னுடைய நீலிகண்ணிர் மட்டும் போதாதென்று, இரண்டு குழந்தைக்குத் தாயான இன்னொருத்தியின் நீலிக் கண்ணிரையும் வாடகைக்குப் பெற்றிருக்கிறார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அம்மையார் அடைந்த மரணம் அகால மரணம்தான் என்றாலும், அதற்குக் காரணம் என் குருநாதர் அல்ல: இயற்கையே’

‘இயற்கையோ செயற்கையோ! - இன்னொருக் கதை தெரியுமா, உங்களுக்கு? நீங்கள் போன பிறகு ஏதோ ஒரு பைத்தியம் இங்கே வந்தது. அது ரூபா பத்தாயிரத்தை கொண்டுவந்து என்னிடம் கொடுத்தது...’

‘அத்தனையும் கள்ள நோட்டாயிருக்குமே!’ “அது எப்படித்தெரியும், உங்களுக்கு?” ‘எல்லாம் என் குருநாதர் கொடுத்ததுதான்’ ‘ஏன்?”

‘அதைக்கொண்டு அதுவே போலீஸ் வலையில் சிக்கிக்கொண்டு விடுமென்று அவர் எதிர்பார்த்தார்; ஆனால் அது சிக்கவில்லை!”

‘அந்தப் பைத்தியம் அப்படி என்ன செய்து விட்டதாம், அவரை?"