பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 201

‘உனக்குத் தெரியாதா, அவன் தான் நறுமணத்தின் அண்ணன் - அவன் தன் தங்கைக்காக அவரைப் பழிவாங்கப் போக, அவர் அவனைப் பைத்தியமாக்கி விட்டு விட்டார்”

‘பாவி! அவன் யாரையும் தன் கையால் கொல்ல வில்லையென்றாலும், அவரவர்கள் தங்களைத்தாங்களே கொலை செய்துகொள்ள அவனல்லவா தூண்டு கோலாயிருந்திருக்கிறான் போலிருக்கிறது?”

‘அது மட்டும் உண்மை; ஆனால் அதுதான் இப்போது அவனை எனக்குப் பணியவைத்திருக்கிறது!”

‘பணியவைத்திருக்கிறதா?” ‘ஆம்; இல்லாவிட்டால் நறுமணத்தைக் கல்யாணம் செய்துகொள்ள அவன் அவ்வளவு எளிதில் சம்மதித் திருப்பானா என்ன?”

‘வெட்கக் கேடுதான்! இப்படியும் ஒரு கல்யாணமா, எனக்கு இது பிடிக்கவில்லை’

‘எனக்கு மட்டும் பிடிக்கிறதா, என்ன? - நமது சமூகத்தில் எடுத்ததற்கெல்லாம் வந்து நிற்கிறார்களே, ‘நாலுபேர் - அந்த ‘நாலு பே'ருக்கு அஞ்சி நறுமணமும், அவள் அண்ணன் நம்பியும் சாகாமலிருக்க வேண்டுமானால் அதைத்தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை, இப்போது!”

‘பரிதாபம்! அப்படியானால் அந்தப் பைத்தியத்தின் கதி

‘தெளிந்துவிடுமென்று டாக்டர் சொன்னார்’ ‘அவரை நீங்கள் பார்த்தீர்களா, என்ன?” “ஆம், பார்த்தேன்; பார்த்ததோடு நில்லாமல் தக்க டாக்டர் ஒருவரிட ம் அவரை ஒப்படைத்துவிட்டும் வந்திருக்கிறேன்!"