பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 விந்தன்

‘பாவம், அந்தப் பெண் தன் கடிதத்தில் என்ன எழுதி யிருக்கிறாள் தெரியுமா! அண்ணன் செத்துப் போய்விட்டான் என்று எழுதியிருக்கிறாள்!”

‘அதெல்லாம் என் குருநாதர் விட்ட சரடு அவற்றை யெல்லாம் மன்னித்துத்தான் அவள் அவரை மணக்க வேண்டும் - கீழே தூங்கிக்கொண்டு இருக்கிறானே, மாஸ்டர் நெடுமாறன் - அவனுக்காக!’ என்றான் ராமமூர்த்தி.

‘என்னமோ, முயன்று பார்ப்போம்!’ என்றாள் கல்யாணி.

<> >

மறுநாள் பொழுது விடிந்ததும், ‘ஐயா இருக்கிறாரா?’ என்ற குரல் வாசலிலிருந்து வந்தது. ‘யார் அது?” என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தாள் கல்யாணி.

“மாணிக்கம் வந்திருக்கிறான் என்று சொல்லுங்கள், ஐயாவுக்குத் தெரியும்’ என்றான் குரல் கொடுத்தவன்.

அதற்குள், ‘அடடே, மாணிக்கமா? வாப்பா, வா!’ என்று அவனை வரவேற்றுக்கொண்டே வந்த ராமமூர்த்தி ‘இவர் நம் வீட்டுத் தோட்டக்காரராயிருந்தவர், கல்யாணி இவர் கடவுளுக்குத் துணை; கடவுள் இவருக்குத் துணை இவரால்தான் நாஸ்திகனாயிருந்த நான்கூட ஆஸ்திகனா னேன்’ என்று சொல்லிக்கொண்டே வந்தவன், திடீரென்று எதையோ பார்த்துத் திடுக்கிட்டவனாய், “இது என்ன மாணிக்கம், எப்போது பார்த்தாலும் எதையாவது உடைத்துக் கொள்ளவேண்டியதுதானா? இந்தக்கால் எப்போது உடைந்தது?” என்றுக் கேட்டான் திகைப்புடன்.

‘அது கிடக்கிறது, விடுங்கள் எது உடைந்தால் என்ன? என் உடம்பிலிருந்து உயிர் பிரியும்வரை என்னுடைய