பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 203

உள்ளம் உடையாமல் இருந்தால்போதாதா? ‘என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு, ‘உங்களிடம் நான் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேச வந்திருக்கிறேன்!” என்றான் மாணிக்கம்.

‘அப்படியென்ன முக்கியமான விஷயம்?” ‘இந்த அம்மாளுக்கு முன்னால் அதைச் சொல்லக் கூச்சமா இருக்கிறது, எனக்கு!”

“பரவாயில்லை, சொல்லுங்கள்! அப்படிச் சொல்வது தான் நல்லதுங்கூட இல்லாவிட்டால் அவள் ஏதாவது விபரீதமாக நினைத்துக்கொண்டாலும் நினைத்துக் கொண்டு விடுவாள்!”

‘உங்களுடைய வாத்தியார் ஐயா இருக்கிறாரே, வாத்தியார் ஐயா - அவர் ஒரு பெண்ணை வஞ்சித்து விட்டார்!”

‘அதற்காக என்னைப் பார்த்து என்ன பிரயோசனம்? அவரையல்லவா நீங்கள் பார்த்திருக்கவேண்டும்?”

‘பார்த்தேன்!” ‘என்ன சொன்னார்?” ‘ஏற்கெனவே அவர் கேள்விப்பட்டிருந்தாராம். நான் அந்தப் பெண்ணைக் காப்பாற்றப் போய் இந்தக் காலை உடைத்துக் கொண்டேன் என்று!”

‘ஒரு பெண்ணுக்காக நீங்கள் செய்த தியாகமோ, இது?”

கிழவன் சிரித்தான்; சிரித்துவிட்டுச் சொன்னான்: ‘நீங்கள் சொல்கிறீர்கள், இதைத் தியாகம் என்று, ஆனால் அவர் என்ன சொல்கிறார், தெரியுமா? - “மடத்தனம்’ என்கிறார்!"