பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 வித்தன்

‘இருக்கலாம்; இது மடத்தனமாயும், ஒரு பாவமும் அறியாத குழந்தையைக் கொல்ல முயன்ற அது தியாக’ மாயும் அவரைப் போன்ற புண்ணியவான்களுக்கு இருக்க லாம்!” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட ராமமூர்த்தி, ‘அப்புறம்?’ என்று கேட்டான், தனக்குப் பின்னால் நின்றுக் கொண்டிருந்தக் கல்யாணியை ஒருக் கண்ணாலும், கிழவனை இன்னொருக் கண்ணாலும் பார்த்துக் கொண்டே.

‘அப்புறம் என்ன, அவருக்கே உரித்தான அந்த அரும்பெரும் உபதேசங்கள்தான்! - முதலில் தன்னைக் காத்துக்கொள்ளவேண்டுமாம்; அதற்குப் பிறகு மற்றவரைக் காக்க முயலவேண்டுமாம் - அதிலும் ஏதாவது ஆதாயம் உண்டா என்று ஆய்ந்து பார்த்தப் பின்னர்!” என்றான் கிழவன்.

‘நீங்கள் என்ன சொன்னீர்கள், அதற்கு?”

‘நன்றி ஐயா, உங்கள் ‘பொன்மொழிக்கு நன்றி என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்’

‘சரி, யார் அந்தப் பெண்? - அவள் பெயர்?”

“அதை நான் கேட்கவில்லை!”

அவ்வளவுதான்; “நீங்கள் ஏன் கேட்கப் போகிறீர்கள்? வாருங்கள், போவோம்!’ என்று அந்த நிமிடமே அவனுடன் கிளம்பினான்ராமமூர்த்தி.

‘எனக்கென்னமோ அவன், இவன் என்று மரியாதை யில்லாமல் பேசும் இடத்தில்தான் அன்பு குடியேறுவதாகத் தெரிகிறது; அவர், இவர் என்று மரியாதையோடு பேசும் இடத்திலிருந்து அது வெளியேறி விடுவதாகத் தெரிகிறது!”

‘உண்மைதான்; ஆனாலும் நீங்கள் என் குருநாதர் அல்லவா?’ என்றார் ராமமூர்த்தி. -