பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 விந்தன்

“என்னடி, இதெல்லாம்?” ‘எனக்கொன்றும் தெரியாது, அம்மா! எல்லாம் ஐயாவின் உத்தரவு...’

“என்ன உத்தரவு போட்டுவிட்டுப் போனார், ஐயா?” ‘உங்களிடமிருந்த கடிதத்தை எப்படியாவது திருடிக் கொண்டு வந்து தன்னிடம் கொடுக்கச் சொன்னார்!”

‘'நான்தான் அது எம்பிராய்டரி டிஸைன் என்று சொன்னேனே?”

‘நீங்கள் சொன்னதை நான் என்னமோ நம்பத்தான் நம்பினேன்; அவர் நம்பவில்லை!”

‘சரி, உனக்கும் அவருக்கும் இதற்குமுன் ஏதாவது உறவு உண்டா?”

“அதைப் பற்றியெல்லாம் இப்போது ஒன்றும் கேட்காதீர்கள்; காலம் வரும்போது சொல்கிறேன்!’

‘ஒஹோ, எங்கே அந்தக் கடிதம்?” ‘கடிதமா, வந்து... வந்து...’ ‘என்னடி வந்து...’ ‘'படித்துப் பார்த்த பிறகு என்னிடம் திருப்பிக் கொடுத்து விடுகிறீர்களா?”

‘ஆகட்டும்!” ‘இந்த விஷயத்தைக் கடைசிவரை ஐயாவின் காதில் போடாமல் இருக்கிறீர்களா?”

‘இருக்கிறேன்!” ‘என்னமோ, உங்களை நம்பிக் கொடுக்கிறேன். எப்படி விட்டாலும் உங்கள் சித்தம்; என் பாக்கியம்!'