பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 21

கடிதத்தைக் கொடுத்தாள் அவள்; அந்தச் சமயத்தில்...

‘காட்டிக் கொடுத்துவிட்டான், பயல் சமயம் பார்த்து அழுது அவளைக் காட்டிக் கொடுத்துவிட்டான்’

இந்தக் குரல் அவருடைய குரல் போலிருக்கிறதே? இவள்தான் வீட்டுக்குப் போகவில்லையென்றால் அவரும் கலாசாலைக்குப் போகவில்லையா, என்ன?

வியப்புடன் அருகிலிருந்த துணி துவைக்கும் கல்லின் மேல் ஏறிச் சுற்றுமுற்றும் பார்த்தாள்.

அதுவரை புழக்கடைக் கதவருகே நின்று கொண்டிருந்த அவர், தலையை ஏதோ ஒரு புத்தகத்தால் மறைத்துக் கொண்டு மேலே நடந்தார்!

கடிதத்தில்....

இடம், தேதி எதையும் முறையாகக் குறிக்காமல் இந்தக் கடிதத்தை எழுத ஆரம்பிக்கிறேன். இத்தனைக்கும் பள்ளியிலேயே நானும் கடிதம் எழுதும் முறையைப் பற்றிப் படித்தவள்தான்; இருப்பினும் என்னுடைய வாழ்க்கையே முறைகெட்டுக் கிடக்கும்போது கடிதத்தில் மட்டும் முறை என்ன வாழுகிறதாம்?

அடுத்தாற்போல் அவரை நான் என்னவென்று அழைக்க9 இதற்கு முன்னர் நான் அவரை என்ன வெல்லாமோ குறிப்பிட்டு அழைத்திருக்கிறேன் என்பது உண்மைதான்; இனி நான் அவரை என்னவென்று அழைப்பது? அதிலும் அவருக்கென்று ஒருத்தி இருக்கும் போது?

அந்த ஒருத்தி இந்தக் கடிதத்தை ஒருவேளை பார்க்க நேர்ந்தால்...