பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 23

வருகின்றன என்கிறது விஞ்ஞானம்; கடலும் காற்றும் கூட, மலரும் மண்ணுங்கூட, கொடியும் சோலையும் கூட, மலையும் நதியும்கூட மாறிவிட்டன, மாறிக் கொண்டே வருகின்றன என்கிறது விஞ்ஞானம். ஆனால் மனிதன்...

மாறவே மாட்டானா? எதில் மாறினாலும் குணத்தில் மாறவே மாட்டானா?

மானம் என்று ஏதோ ஒன்று இருப்பதாகச் சொல் கிறானே, மனம் என்று ஒன்று இருக்கிறதா, இவனுக்கு?

இருந்தால் ஏதும் அறியாத என் செல்வத்தை என் கண்ணின் மணியைக் கழுத்தைப் பிடித்துத் திருகிக் கொன்றுவிடச் சொல்வானா, அவன்? கொன்று, குப்பைத் தொட்டியில் வீசி எறிந்துவிடச் சொல்வானா, அவன்?

ங்கா, ங்கா...!

செவியில் தேனாகப் பாய்ந்து, இதயம் முழுவதையும் இனிப்பாய் இனிக்க வைக்கும் இவன் குரலை உலகத்துக்குக் கேட்கவொட்டாமல் தடுக்க நான் யார்? அவன் தான் யார்?

‘'எத்தனை கோடி இன்பம் வைத்தாய், எங்கள் இறைவா, இறைவா, இறைவா!’ என்று பரவசத்துடன் பாடுகிறான் பாரதி; அத்தனை கோடி.இன்பமும் ஒருங்கே எங்கேயாவது இருக்கிறதென்றால், அது இந்த ‘ங்காவிலல்லவா இருக்கிறது?

சகோதரி இவனுடைய பொக்கை வாய்ச்சிரிப்பு இருக்கிறதே, பொக்கை வாய்ச் சிரிப்பு எவ்வளவு சக்தி வாய்ந்தது தெரியுமா, அது?

ஒருநாள் இரவு: யாரோ குமுறிக் குமுறி அழும் சத்தம் என் காதில் விழுந்தது. திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன்; பக்கத்திலிருந்த குழந்தையைக் காணவில்லை!