பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 25

போலீஸ்!

தீர்க்கமாக குரல் எழுப்பினேன் நான்; ஆனால்...

காரியம் எதுவாய்த்தான் இருக்கட்டுமே, அது நடப்பதற்கு முன்னால் நடக்கப் போவதற்கு முன்னால் அவர்கள் எங்கே வருகிறார்கள்? நடந்த பிறகு வருவதல்லவா அவர்கள் வழக்கம்?

வரட்டும்; அல்லது வராமற் போகட்டும் என்னுடைய குழந்தையைக் கொல்லத் துணிந்த இவளை நானே கொன்று விட்டால் என்ன?

இப்படித் தோன்றிற்றோ இல்லையோ, குழந்தையைக் கீழே கிடத்திவிட்டு அவள் மேல் பாய்ந்தேன். பாய்ந்து, அவள் நெஞ்சை என் இரு கைகளாலும் அழுத்திப் பிடித்து ஒர் உலுக்கு உலுக்கினேன்!

‘விட்டுவிடடி, உனக்காகவாவது இன்னும் கொஞ்ச நாட்கள் உயிர் வாழ என்னை விட்டு விடடி!’ முக்கி முனகிக் கத்த முடியாமல் கத்தினாள் அவள்.

எப்படி இருக்கிறது, கதை? - எனக்காக இன்னும் கொஞ்ச நாட்கள் இவள் உயிர் வாழப் போகிறாளாம்.

ஏன்? - எனக்காக என் குழந்தையைக் கொல்ல; அதன் மூலம் இழந்துவிட்ட கன்னித் தன்மையை நான் மீண்டும் பெற்று விட்டதாக மனப்பால் குடிக்க. உற்றார் கண்ணிலும் ஊரார் கண்ணிலும் மண்ணைத் தூவி, என்னை வேறு யாராவது ஒர் அப்பாவியின் கழுத்தில் கட்டிக் கண் குளிரப் 14561

பார்க்கட்டும் அந்தக் கண்ணராவிக் காட்சியைக் காண என் அம்மா தான் இல்லையே, இவளாவது பார்க்கட்டும் - விட்டு விட்டேன் அவளை