பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 33

இவர் கொடுத்தார் என்றால் யாருக்குக் கொடுத்தார்? ஏன் கொடுத்தார்?

நறுமணத்துக்குக் கொடுத்தாரா. தன்னை மறந்து விடுவதற்காக அவளிடம் கொடுத்திருந்தால் அது எப்படி இவனிடம் வந்திருக்கும்? இவன் ஒருவேளை அவளுடைய அண்ணனாயிருப்பானா? - அவன்தான் தனக்காக உயிர்துறந்துவிட்டான் என்று அவள் எழுதியிருக் கிறாளே

என்ன இழவோ, எல்லாம் ஒரே குழப்பமாகவல்லவா இருக்கிறது!

இந்தக் குழப்பத்தில் பணத்தை மட்டும் மறந்து விடாமல் எடுத்துப் பீரோவில் வைத்துப் பூட்டிவிட்டுக் கடிதத்தைக் கொண்டுபோய்த் தபாலில் சேர்த்துவிட்டு வந்தாள் கல்யாணி.

இப்பொழுதுதான் அவளுடைய மனச்சுமை கொஞ்சம் குறைந்தது போலிருந்தது; உற்சாகத்துடன் குழந்தையை நெருங்கி, “ஹெல்லோ, மாஸ்டர் ராமமூர்த்தி’ என்றவள், ‘ஒ, கணவரின் பெயரைச் சொல்லக் கூடாதோ, மனைவி? - ஐ ஆம் ஸாரி!’ என்று தனக்குத் தானே வருத்தம் தெரிவித்துக் கொண்டு, ‘உன் பெயர் என்னடா, அதையாவது சொல்லித் தொலையேன்” என்றாள்.

குழந்தை சிரித்தது!

‘'சிரித்தால் என்ன அர்த்தம்? இளித்தவாயன் என்று அர்த்தமா?”

அதற்கும் சிரித்தது அது

‘பிழைத்துக் கொள்வாயடா பயலே, நீ பிழைத்துக்

கொள்வாய்!” என்று சொல்லிக் கொண்டே சென்று,

, to – 3