பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 விந்தன்

தனக்குச் சீதனமாக வந்திருந்த வெள்ளிப் பால் குப்பியை எடுத்து, அதில் அவனுக்கென்று ஏற்கனவே ஒதுக்கி வைத்திருந்த பாலை நிரப்பினாள்.

வேறு வழி, அவள் தாயாகாவிட்டாலும் அவளுடைய கணவன்தான் தந்தையாகி விட்டானே?

3. கல்லாத பேர்களே நல்லவர்கள், நல்லவர்கள்!

அன்று மாலை; கடற்கரை மணல்திட்டின் மேல் அமர்ந்து, நறுமணம்’ என்று எழுதுவதும், எழுதியதைக் கலைப்பதுமாக இருந்தான் ராமமூர்த்தி.

‘தம்பி!’

அவனுக்கு எதிர்த்தாற்போல் அமர்ந்திருந்த டாக்டர் நெடுமாறனார். குரலில் தேனைக் குழைத்து அவனுடைய மெளனத்தைக் கலைக்க முயன்றார்; முடியவில்லை.

‘தம்பி!’

முதல் முயற்சியில் தோல்வியுறவே, அவனுடைய தோளைப் பற்றித் தம்முடைய இரண்டாவது முயற்சியைத் தொடங்கினார் பேராசிரியர்.

தலை நிமிர்ந்தான் தம்பி!

‘இன்று காலை நீ கலாசாலைக்கு வந்ததிலிருந்தே உன்னை நான் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன்; நீ உன் வசமில்லை!”

‘எப்படி இருக்க முடியும்?’ அப்போதுதான் வாயைத் திறந்தான்.