மனிதன் மாறவில்லை 35
‘இருக்க முடியாதுதான்; இருக்க முடியாது தான்!’ என்று தலையை வழக்கம்போல் அவனுக்குச் சாதகமாக ஆட்டிவிட்டு, ‘சொன்னது சொன்னபடி அவள்
செய்து விட்டாளா?’ என்றார், தம் தொனியை மாற்றிக்கொண்டு.
“ஆம், சொன்னது சொன்னபடி செய்தும்
ஆகிவிட்டது; தப்பியும் ஆகிவிட்டது!”
‘நீ என்ன செய்தாய், எப்படி மனைவியிடமிருந்து தப்பினாய்?”
‘வேலைக்காரி விசாலத்தின் துணையைக் கொண்டு தப்பினேன்; குழந்தையையும் அவளுடையக் குழந்தை என்றுச் சொல்லி அவளிடமேக் கொடுத்து அனுப்பினேன்!’
‘அதுவே கற்றவரின் சிறப்பு; அதுவே கற்றவரின் சிறப்பு! - மற்றவராயிருந்தால் அந்தக் கணமே அறிவை இழந்து ஆத்திரம் கொண்டிருப்பர் குழந்தையையும் அதன் தாயையும் அக்கம் பக்கத்தார் அறியும் அளவுக்கு அடித்து விரட்டியிருப்பர். அல்லது கொண்ட மனைவியிடம் குரூரமாக நடந்து கொண்டிருப்பர்.
‘புறவாழ்வில் எப்படியிருந்தாலும் அக வாழ்வில் அவர்கள் நம்மைவிடத் தூய்மையும் வாய்மையும் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்!”
‘நினைப்பது சரி; ஆனால் நினைப்பதை நினைப்ப தோடு நிறுத்திக் கொள், தம்பி! இல்லாவிட்டால் நம் வாழ்வு சிறக்காது!”
‘அதற்காகப் பொய்யையும், போலித்தனத்தையுமே துணையாகக் கொண்டு நாம் வாழ வேண்டுமா, என்ன?”