பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 விந்தன்

‘இந்த உலகத்தில் எதுதான் பொய் இல்லை ? . எல்லாமே பொய்தான்! - பொய்யான உலகத்தில் பொய்யான வாழ்வு வாழ்ந்தால்தான் பொருளும் புகழும் நம்மைத் தேடி வரும்!”

‘அந்தப் பொருளும் புகழும் மட்டும் பொய் இல்லையா?”

‘பொய்தான்; ஆனால் நம் வாழ்வைச் சிறக்க வைக்கும் பொய்கள் அவை!”

‘ஊரை ஏமாற்றித்தானே?”

‘ஊரை நாமா ஏமாற்றுகிறோம்? ஊர் நம்மிடம் ஏமாறுகிறது என்றுச் சொல்!”

‘ஏமாறும் ஊரை விழிப்படையச் செய்வதல்லவா நம்மைப் போன்றவர்களின் கடமை?”

‘தவறாகச் சிந்திக்கிறாய் தம்பி, தவறாகச் சிந்திக்கிறாய்! என்னுடைய நூல்கள் அனைத்தையும் நீ படித்திருக்கிறாய், இல்லையா?”

“என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள்! நீங்கள் எந்த நூல் வெளியிட்டாலும் அந்த நூலுக்கு முதல் வாசகன் நான்தானே?”

‘என்னுடைய நூல்களில் பொதுப்படையாக நான் என்ன சொல்கிறேன்?”

உணர்ச்சிக்கு இடம் கொடுக்கக் கூடாது. உணர்ச்சிக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறீர்கள்!”

‘அதுவே நம் வாழ்வுக்கு அடிப்படை, அதுவே நம் வாழ்வுக்கு அடிப்படை’ என்று சொன்னவர் எழுந்தார். எழுந்து, “அதை மறந்து நீ இப்போது உணர்ச்சிக்கன்றோ இடம் கொடுத்துவிட்டாய்’ என்று நடந்தார். நடந்து,