பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 37

‘எல்லாம் அந்த குருஷேவால் வந்த வினை செத்த பிறகும் தன்னுடைய செல்வாக்குக்குத் தடையாயிருந்து வந்த ஸ்டாலினின் புகழை மறைப்பதற்காக, தனி நபர் வழிபாடு கூடாது’ என்று அவன் ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்கி வைத்தாலும் தொடங்கி வைத்தான் - மாணவர் உலகம் இப்போதெல்லாம் யார் எதைச் சொன்னாலும் எடை போட்டுப் பார்க்கவும், எதிர்க் கேள்வி கேட்கவும் தொடங்கிவிட்டது!” என்று முணுமுணுத்துக்கொண்டே திரும்பினார். திரும்பி, ஏற்கெனவே அமர்ந்திருந்த இடத்துக்கே வந்து அமர்ந்தார். அமர்ந்து, “நீயோ நானோ உணர்ச்சிக்கு இடம் கொடுப்பதில் தவறில்லை, தம்பி! - உணர்ச்சிக்கு இடம் கொடுக்காவிட்டால் இந்த உலகத்தில் நமக்கு இன்பமும் இல்லை - ஆனால் அதே உணர்ச்சிக்கு இடம் கொடுக்குமாறு மக்களை மட்டும் நாம் தூண்டிவிட்டு விடக் கூடாது; அவ்வாறு தூண்டிவிடுவதை யாராவது கடமையாகக் கொண்டாலும், அந்தக் கடமையை நாம் கயமை என்று சொல்லி முறியடிக்க வேண்டும். இல்லா விட்டால் நம்மைப் போன்றவர்கள் தட்டி ஒட்டும் வழியில் செல்லும் காயடித்த மாடுகளாக மக்கள் இருக்க மாட்டார்கள்; எடுத்ததற்கெல்லாம் முட்ட வரும் மாடுகளாக இருப்பார்கள்!’ என்று தாம் கொண்ட கருத்தின் சிறப்பியல்பைச் சற்றே எடுத்து விளக்கினார் டாக்டர்.

அவ்வளவுதான்; தம்பி அயர்ந்து விட்டான். ‘என்னே, தங்கள் நுண்ணறிவு, என்னே தங்கள் நுண்ணறிவு!” என்ற ‘உங்க"ளுக்குப் பதிலாகத் தங்களைப் போட்டு வியந்துரைத்தான்.

அதுதான் சமயமென்று விட்டுப்போன இன்னொரு

கருத்தின் சிறப்பியல்பையும் சற்றே எடுத்து விளக்கலானார்