பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 விந்தன்

‘கற்றவரின் சிறப்பியல்பு குறித்து நான் கூறுங் காலையில், மற்றவரின் சிறப்பியல்பு குறித்து நீ கூறினாய்; புறவாழ்வில் எப்படி யிருந்தாலும் அக வாழ்வில் அவர்கள் நம்மைவிடத் தூய்மையும், வாய்மையும் உள்ளவர்களா யிருக்கிறார்கள் என்று! - அதுவும் தவறே, அதுவும் தவறே. அவ்வாறு இருப்பதால் அவர்களை உலகம் போற்றவா செய்கிறது? இல்லை; அநாகரீகர்கள் என்று தூற்றுகிறது. ஆகவே, நாம் என்ன செய்ய வேண்டும்? அத்தகை யவர்களை ‘அன்பில்லாதவர் பட்டியலிலும் பண்பில் லாதவர் பட்டிய லிலும் சேர்த்துவிட வேண்டும். அவ்வாறு சேர்த்து, விட்டால்தான் நம்மைப் போன்ற வர்களை அன்புள்ள வர்கள் என்றும், பண்புள்ளவர்கள்’ என்றும் உலகம் மதிக்கும்; மலர்மாலை சூட்டி மகிழும்; கைகொடுக்கும்; கைதட்டி ஆரவாரம்கூடச் செய்யும் இவையனைத்தும் உலகம் தெரியாத உன்னைப் போன்ற இளைஞர்களுக்குப் பொய்யாகத் தோன்றலாம்; போலித்தனமாகத் தோன்றலாம். ஆனால் வாழ்வின் வெற்றிக்கு வழி இதுவே, வாழ்வின் வெற்றிக்கு வழி இதுவே! - என்ன தம்பி, புரிந்ததா?”

‘புரிந்தது!”

‘இனித் தப்பிவிட்ட அந்தக் குழந்தையின் தாயிடமிருந்து நாம் தப்ப வேண்டும்?”

‘ஏன்?”

‘அவள் தன்னைத் தற்கொலைக்கு உள்ளாக்கிக் கொண்டு விடலாமன்றோ!’

‘அதற்காக நீங்கள் கவலைப்படுகிறீர்களா, என்ன!”

‘கவலை அவளுக்காக அன்று; கடிதம் எழுதி வைத்து விட்டு அவள் தன்னை மாய்த்துக் கொள்ளப் போக, அந்தக் கடிதத்தால் நம்முடைய புகழுக்கும் பெருமைக்கும் ஏதாவது இழுக்கு நேரலாமன்றோ?'