பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 39

இப்பொழுதுதான் தன் மனைவியிடம் சிக்கியிருக்கும் கடிதத்தைப் பற்றிய நினைவு ராமமூர்த்திக்கு வந்தது. “ஆம், என் மனைவியிடம் கூட ஏதோ ஒரு கடிதம் சிக்கித்தான் இருக்கிறது!” என்றான்.

‘அதை நீ பார்த்தாயா?” ‘இல்லையே!” ‘அவசியம் பார்த்திருக்க வேண்டுமே, அதை?’ ‘பார்க்க முயன்றேன்; வெற்றி கிட்டவில்லை!” ‘மீண்டும் முயன்று பார்!’ ‘பார்க்கிறேன்!” ‘அதைத் தவிர வேறொரு கடிதமும் அவள் எழுதி வைத்திருக்கலாம்; முதல் கடிதம் குழந்தையைப் பற்றிய தாகவும், இரண்டாவது கடிதம் நம்மைப் பற்றியதாகவும் இருக்கலாம்!”

“எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஏனெனில், இது வரை நம்முடைய புகழுக்கும் பெருமைக்கும் இழுக்கு நேரக்கூடிய வகையில் எதுவும் நடக்கவில்லை; இனியும் நடக்காது!’ t

‘அவள்மேல் உனக்கு நம்பிக்கை இருக்கலாம்; எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. ஏனெனில், தன் குழந்தைக்காகத் தன்னைக் கட்டிக் காத்து வளர்த்த பாட்டியையேக் கொல்லத் துணிந்த அவள், எதற்கும் துணிவாள்’

‘அதற்காக அண்ணனைக் கொன்றது போலத் தங்கையையும் கொன்றுவிட வேண்டுமா, என்ன?”

‘அவசியமிருந்தால் அதையும் செய்ய வேண்டியது தான். சட்டத்தின் கண்களுக்குத் தெரியாமல்!"