உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 விந்தன்

‘ஆம்; கற்றவர்களால்தான் எதையும் சட்டத்தின் கண்களுக்குத் தெரியாமல் செய்ய முடியும். மற்றவர்களால் செய்ய முடியாது; செய்யத் தெரியாது!”

‘மீண்டும் உணர்ச்சி வசப்படுகிறாய் தம்பி, மீண்டும் நீ உணர்ச்சி வசப்படுகிறாய்!”

‘மன்னியுங்கள் என்ன இருந்தாலும் நான் உங்கள் மாணவன்தானே?”

“ஆம், கல்வித் துறையில் மட்டுமல்ல வாழ்க்கைத் துறையிலும் நீ என் மாணவன்; மதிப்புக்குரிய மாணவன் வா, போகலாம்!’ என்று அவனைத் தட்டிக் கொடுத்து எழுப்பினார் டாக்டர்.

‘இருள் சூழும் இந்த நேரத்தில் எங்கே அழைக்கிறீர்கள், என்னை?”

‘அவளைத் தேடத்தான்!”

‘தேடுவதாயிருந்தால் காலையிலல்லவாத் தேடி யிருக்க வேண்டும்?”

‘உனக்குத் தெரியாது, தம்பி! தற்கொலைக்குத் தன்னை உள்ளாக்கிக் கொள்பவர்களுக்கு இதுதான் தகுந்த நேரம்!”

‘அப்படியே இருந்தாலும் அது எங்கே, எப்போது நடந்திருக்கக்கூடும் என்பதை நம்மால் எப்படி ஊகித்தறிய முடியும்?!’

‘ஏன் முடியாது? ஏற்கெனவே ஒருமுறை அவள் தன்னைத் தற்கொலை செய்துகொள்ளத் துணிந்தபோது சேத்துப்பட்டுக்கும் நுங்கம்பாக்கத்துக்கும் இடையே உள்ள இருப்புப் பாதையை நோக்கி ஓடவில்லையா? அதே இடத்துக்குத்தான் இன்றும் போயிருப்பாள்!"