பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ‘கடவுள் காப்பாற்றினார்!”

கூ. குப் குப் குப்!

வந்துவிட்டது; தன்னை நெருங்கி வந்தே விட்டது இன்னும் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் இந்த வஞ்சக உலகத்திலிருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடும் கடவுளே!

கண்ணை மூடிக்கொண்டாள் நறுமணம்...

‘அம்மா!’

ஆம், இன்னும் கொஞ்ச நாட்களுக்கெல்லாம் அவன் என்னை ‘அம்மா’ என்று அழைப்பான் - அப்போது நான் எங்கே இருப்பேன்? என்ன செய்வேன்?

ஆவி உருவில் அவனை வளைய வந்து கொண்டி ருப்பேனா? அம்மா!’ என்று அழைக்கும்போது, அட என் செல்வமே!’ எங்கே இருப்பேன்? என்ன செய்வேன்?

ஊஹாம் - கூடாது; அப்படியெல்லாம் செய்யவேக் கூடாது செய்தால், குழந்தைகளுக்குத் தோஷம் வந்துவிடுமாம்; அந்தத் தோஷம் அவற்றுக்கு ஆகாதாம்!

இது போதாதா? ஆவி உருவில் இருக்கும் என்னை அவனால் பார்க்க முடியாது; அவனை மட்டும் என்னால் பார்க்க முடியும் - இதுவே வேடிக்கையாயிருக்குமே? இதுவே அவனுடன் ‘கண்ணாமூச்சி விளையாடுவது போலிருக்குமே? - இது போதாதா?

எனக்குப் பிறகு அவர் என்ன செய்வார்? என் மகன்’ என்று அவனை ஏற்றுக்கொள்வாரா? - அப்படி ஏற்றுக் கொள்பவராயிருந்தால் அவனுடையக் கழுத்தைப் பிடித்து நெரித்து விட வேண்டுமென்றா சொல்லியிருப்பார்? - எல்லாம் கனவு; வெறும் கனவு...