மனிதன் மாறவில்லை 45
வேறு யாராகவாவது இருந்திருந்தால் இந்த அதிர்ச்சியில் செத்தே போயிருப்பார்கள்; ஏற்கெனவே செய்திருக்கும் பாவங்கள் போதாதென்று இந்தப் பாவம் வேறு வந்து தன்னைச் சேர்ந்திருக்கும் கடவுளே! இந்த ஒரு விஷயத்திலாவது என்னைக் காப்பாற்றினாயே? - நன்றி; மிக்க நன்றி!
இனி, தான் செய்யவேண்டியதென்ன? இந்தக் கிழவனை இப்படியே விட்டுவிட்டு இன்னொரு ரயிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாமா, தன்னை மாய்த்துக் கொள்ள?
என்ன கேவலமான எண்ணம்? என்ன கீழ்த்தரமான உணர்ச்சி! - தனக்காக, தன்னைக் காப்பாற்றியக் குற்றத்துக்காக இங்கே ஒர் உயிர் ஊசலாடிக் கொண்டி ருக்கிறது; இதை விட்டு விட்டுத் தானாவது, ஒடவாவது!
ஊஹாம் - ஒட மாட்டேன்; இந்தக் கிழவனின் உடம்பில் உயிருள்ளவரை இவனை விட்டு என், இந்த உலகத்தை விட்டே நான் ஒடமாட்டேன்!
உடனடியாகத் தான் செய்ய வேண்டியதெல்லாம் இந்தக் கிழவனுக்கு முதல் சிகிச்சை அளிப்பதே! அதற்குப் றகு தான் மற்றவையெல்லாம் . ஆனால் எதைக் கொண்டு அதை அளிப்பது, எவரைக் கொண்டு அதைச் செய்வது?
ஆம், அவர் வருவார்; தான் அழைத்தால் அவசியம் அவர் வருவார்! - இங்கிருந்து பார்த்தால் அவ்வளவு தூரத்தில் கூட இல்லையே, அவருடைய வீடு? நடந்தால் பத்து நிமிஷம்; ஓடினால் அதுகூட ஆகாது!
அதற்குமேல் அவள் அங்கே நிற்கவில்லை - ஒடினாள். தன் குடும்ப டாக்டரான தணிகாசலத்தின் வீட்டை நோக்கி.