பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 விந்தன்

‘என்ன தாத்தா, வலி பொறுக்க முடியவில்லையா?” கண்ணை மூடிக்கொண்டு விட்டீர்களே’

‘எனக்கு ஏன் வலிக்கிறது? வலித்தால் கடவுளுக்குத் தான் வலிக்கும்!” என்று சொல்லிக் கொண்டே கண்களைத் திறந்தான் கிழவன்; டாக்ஸி டிரைவருடன் அவனுக்கு எதிர்த்தாற்போல் நறுமணம் நின்று கொண்டிருந்தாள்.

‘வந்துவிட்டாயா, அம்மா? வா வா, வீட்டுக்குப் போவோம்!”

‘iட்டுக்குப் போய் என்ன செய்வது, தாத்தா? ஆஸ்பத்திரிக்குப் போவோம், வாருங்கள்!”

‘அங்கே போனால் பாதிக் கால் பாக்கியிருக்கிறதே, அதையும் எடுத்தாலும் எடுத்துவிடுவார்களே, அம்மா!’

‘வீட்டுக்குப் போனால்?”

‘கடவுளின் மருந்து இருக்கிறது; அதை வைத்துக் கட்டினால் நாலே நாட்களில் ஆறிப்போகும்’ என்றான் கிழவன்.

‘கடவுளின் மருந்தா! அது என்ன மருந்து, தாத்தா?” என்றாள் நறுமணம், வியப்புடன்.

‘பச்சிலை மூலிகை அம்மா, மனிதனின் கை படாதது!’

‘சரி, வாருங்கள்!’ என்றாள் நறுமணம், அதையும் தான் பார்த்துவிடுவோமே?’ என்ற துணிவுடன்.

“அதோ இருக்கிறது பார், ஒரு சிறு மூட்டை அதை எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறாயா?” என்றான் கிழவன், ‘ரயில்வே லைனுக்கு அப்பால் விழுந்து கிடந்த ஒரு சிறு மூட்டையைச் சுட்டிக் காட்டி. நறுமணம் ஓடோடியும் சென்று அதை எடுத்துக் கொண்டு வந்தாள்.