பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 51

டிரைவர் ஒரு பக்கமும் நறுமணம் இன்னொரு பக்க முமாக நின்று, கிழவனைத் தூக்கி நிறுத்த முயன்றார்கள்; ‘'வேண்டாம்; யாராவது ஒருவர் இந்தப் பக்கம் வந்தால் போதும்’ என்று கால் ஒடிந்த பக்கத்தைக் காட்டினான் கிழவன்.

நறுமணம் வந்து நின்றாள்; ‘'எடுத்துக் கொண்ட காலைக் கொடுத்து விட்டார் கடவுள் எடுத்துக் கொண்ட காலைக் கொடுத்துவிட்டார்!’ என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே, அவளுடைய தோள்களைப் பற்றிக் கிழவன் நடந்தான்.

ஒரு குடிசை படிப்பதற்கென்றோ, பார்வையாளருக் கென்றோ, சமைப்பதற்கென்றோ, சாப்பிடுவதற்கென்றோ, ஒய்வெடுத்துக் கொள்வதற்கென்றோ, உடுப்பதற்கென்றோ தனித்தனி அறைகள், கூடங்கள், தோட்டங்கள் எதுவுமே கிடையாது அந்தக் குடிசையிலே - வேறு என்ன தான் இருந்தது?

அந்தக் குடிசைக்குப் பின்புறத்திலே ஒரு கொல்லை; கொல்லைக்கு நடுவே ஒரு துரவு அந்தத் துரவுக்கு அருகே வரிசை வரிசையாக வெண்டைச் செடிகள், கத்திரிச் செடிகள், தக்காளிச் செடிகள், கீரை வகைகள், மூலிகை வகைகள் அவற்றுக்கு மேலே போடப்பட்டிருந்த மூங்கில் பந்தலின் ஒரு பக்கத்திலே அவரைக்கொடி, இன்னொரு பக்கத்திலே புடலைக்கொடி - அவற்றுக்கு இருமருங்கிலும் வாழை; அந்த வாழைக்குப் பின்னால் தென்னை - முன் புறத்தில் ஒரு பக்கம் கனகாம்பரம்; மஞ்சாரம்பரம், டிசம்பர், காட்டு ரோஜா முதலான பூஞ்செடிகள்; பின்புறத்தில் இரண்டு முருங்கை அவற்றுக்கு நடுவே ஒரு பசு இவற்றைத் தவிர?

சுற்று முற்றும் பார்த்தாள் நறுமணம் - அந்தப் பேராசிரியரின் மாடமாளிகை எங்கே. இந்தக் கிழவனின்