பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 55

எடுத்து அவளிடம் கொடுத்து, இவ்வளவுதான் என்னால் முடிந்தது; போதுமா உங்களுக்கு? என்றாள் தயக்கத்துடன். கண்களில் நீர் மல்க நறுமணத்தின் கைகள் இரண்டையும் சேர்த்துப் பிடித்துக் குலுக்கி, போதும்; தாராளமாகப் போதும். மிக்க நன்றி உங்களுக்கு; ஊருக்குப் போனதும் அவசியம் திருப்பி அனுப்பி விடுகிறேன்!” என்று சொல்லிவிட்டுப் போனாள் அவள்.

அவளுடைய தலை மறைந்ததும், தவறு செய்கிறாய் நறுமணம், நீ தவறு செய்கிறாய்! என்றார் பேராசிரியர். ‘மன்னியுங்கள்; மனிதப்பற்றைக் காட்டிக்கொள்ளும் வகையில் இம்முறை என்ன, இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் தவறு செய்ய நான் தயாராயிருக்கிறேன்!” என்றாள் அவள் - மொழிப் பற்றில் லாபமும், மனிதப் பற்றில் நஷ்டமும் இருக்கும் ரகசியத்தை அறியாமல்!

வாழ்க்கையையே வரவு - செலவு கணக்காக வைத்துக் கொண்டிருக்கும் இத்தகைய கனவான்களிடம் அவள் என்னத்தைக் கண்டாள்? - பேச்சு, பேச்சு, பேச்சு; எடுத்ததற் கெல்லாம் பேச்சு, பேச்சு, பேச்சு - பழி, பழி, பழி; எடுத்ததற்கெல்லாம் பிறர் மேல் பழி, பழி, பழி - படித்தவர்களிடம் இதைத்தவிா வேறொன்றையும் காணாத நறுமணத்தைப் படிக்காத கிழவனின் பரிவும் கனிவும் என்னவோ செய்தன. அத்துடன், அவள் அப்போது இருந்த நிலை, நேரம், அந்தக் குடிசையிலே அவள் கண்ட அமைதி, அன்பென்னும் பெயரைக்கூட அறியாத அன்பு - ஆக எல்லாம் சேர்ந்து அவளுடைய நெஞ்சை நெகிழ வைத்த தோடு, கண்களையும் குளமாக்கிவிட்டன. “தாத்தா!’ என்ற கரகரத்த குரலோடு திரும்பினாள்; திரும்பி, கிழவனின் ஒடிந்த காலில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு, ‘உங்களுடைய வேதனை உங்களுக்குப் பெரிதில்லையா, தாத்தா? என்னுடைய