பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 57

‘வேலையா, இப்பொழுது ஒன்றுமில்லை; ஏதோ திராவிட நாடாமே, அது கிடைத்தால்தான் அவருக்கு வேலை கிடைக்குமாம்!”

‘அதுவரை தின்னச் சோறு?”

‘திராவிட நாடு கிடைத்தால்தானாம்!”

“கட்டத் துணி?”

‘அதற்கும் திராவிட நாட்டைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்!”

“இருக்க இடம்?”

‘திராவிட நாடு கிடைக்கும்வரை எங்கே கிடைக்கிறதோ, அங்கே!’

‘அப்படியானால் இப்போது...’

‘எப்படி உயிர் வாழ்கிறார் என்று கேட்கிறாயா? அவருடைய கைகள் செய்ய வேண்டிய வேலையையும் சேர்த்து இந்தக் கைகளே செய்கின்றன; அதனால் அவரைப் பொறுத்தவரை திராவிட நாட்டுக்கு அப்படியொன்றும் அவசரமில்லை!” என்று தன்னுடையக் கைகளை நீட்டிக் காட்டினான் கிழவன்.

‘இங்கே நான் வந்ததிலிருந்து அவரைப் பார்க்கவேயில்லை?”

‘இருந்தால்தானே பார்ப்பதற்கு?”

“எங்கே போயிருக்கிறாராம்?”

‘யாருக்குத் தெரியும், எங்கேயாவது அறிவுப் பிரசாரம் செய்யப் போயிருப்பார்!”

‘அறிவுப் பிரசாரமா அந்தப் பிரசாரத்தையெல்லாம் நீங்கள் கேட்பதில்லையா?"