உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 விந்தன்

‘எனக்கு அறிவில்லை என்று நான் நினைக்க வில்லையே அம்மா!’

‘அப்படியானால் அறிவில்லாதவர்கள் தான் அவருடைய பேச்சைக் கேட்கிறார்களா, என்ன?” என்றாள் தாழம்பூ, குறுக்கிட்டு.

‘கேட்கமாட்டாயா? - கேட்பாய், கேட்பாய்! - அதற்குத்தானே எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்கிறேன்” என்று உனக்கிருந்த இயற்கையான அறிவைப் போக்கி விட்டுச் செயற்கையான அறிவைப் பலவந்தமாகத் திணித்திருக்கிறார் உன் அத்தான் - போலி கடைச் சரக்கில் தான் போலி; என்றால் கல்வியால் மனிதன் பெற்ற அறிவிலும் போலி! அதனால் தான் வாழ்க்கையே போலி யாகிவிட்டது இன்று எல்லாம் கடவுள் கொடுத்த இயற்கையான அறிவே உண்மையான அறிவு என்பதை நாம் உணராததால் வந்த வினை!’ என்றான் கிழவன், தலையில் லேசாகத் தட்டிக்கொண்டே.

இதைக் கேட்டதும் வியப்பினால் நறுமணத்தின் கண்கள் விரிந்தன. காலம் போகிற போக்கைப் பார்த்தால் அவ்வளவு எளிதில் தள்ளிவிட முடியாது போலிருக்கிறதே, இந்தப் பெரியவரின் கருத்தை’ என்று நினைத்த அவள், ‘ஏன் தாத்தா, உண்மையாகவே நீங்கள் படிக்கவில்லை யென்றா சொல்கிறீர்கள்?’ என்றாள் கொஞ்சம் அவநம்பிக்கையுடனே.

‘உண்மையைத் தவிர நான் வேறொன்றும் சொல்வதில்லை, அம்மா’ என்றான் கிழவன்,அழுத்தந் திருத்தமாக,

‘'படித்தவர்களெல்லாம் புத்திசாலிகளாக இருந்து விடுவதுமில்லை; படிக்காதவர்களெல்லாம் மடையர் களாக இருந்து விடுவதுமில்லை!” என்றாள் தாழம்பூ.