பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 59

‘'தேவலையே, இயற்கையான அறிவில்கூட இன்னும் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்கிறார் போலிருக்கிறதே, உன் அத்தான்!’ என்றான் கிழவன், குறுநகையுடன்.

‘போ, தாத்தா!’ என்றாள் அவள், தலையைக் கவிழ்த்துக்கொண்டு.

‘'சரி வாருங்கள்; சாப்பிடப் போவோம்!’ என்று கிழவன் எழுந்தான் - அதற்குள் தயார் செய்துக் கொண்டு விட்ட ஊன்றுகோலைத் தரையில் ஊன்றி.

‘தெய்வம் இருக்கிறது; இங்கே தெய்வம்

இருக்கத்தான் இருக்கிறது!’ என்று தனக்குள் நினைத்துக்கொண்டே அவனைத் தொடர்ந்தாள் நறுமணம்.

பேய்க்குப் பயந்து ஓடி வந்த பேராசிரியர்கள் இருவரும் சேத்துப்பட்டுக்கும் நுங்கம்பாக்கத்துக்கும் இடையே உள்ள ‘ரயில்வே லைன் ஒரமாக ‘டார்ச் லைட் டை அடித்து அடித்துப் பார்த்துக் கொண்டே வந்தார்கள். ‘என்ன பார்க்கிறீர்கள்?’ என்று வழிப் போக்கர்களில் ஒரிருவர் கேட்டதற்கு. ‘மணிபர்ஸ் தவறிக் கீழே விழுந்து விட்டது; அதைத்தான் பார்க்கிறோம்!” என்று மெய் சொன்னார்கள் - பேராசிரியர்களல்லவா?

கூவம் பாலத்தை கடந்து கொஞ்சதூரம் சென்றதும், ‘இதோ கிடைத்து விட்டது, கடிதம்!’ என்று கூச்சலிட்டான் ராமமூர்த்தி,

“எங்கே, எங்கே?’ என்று அவனை நோக்கி விரைந்து வந்தார் டாக்டர் நெடுமாறன்.

அதற்குள் கடிதத்தைப் படித்து முடித்துவிட்ட ராமமூர்த்தி, ‘தெய்வம். என் தெய்வம்’ என்று தன்னை மறந்து கத்தினான்..!