பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 விந்தன்

“தெய்வ நம்பிக்கை இருப்பவர்களுக்கு இருக்கட்டும்; நமக்கு வேண்டாம் அது. நீ கடிதத்தைக் கொடு இப்படி!’ என்று கடுகடுத்துக்கொண்டே நெடுமாறன் கையை நீட்டினார்.

அதைப் பொருட்படுத்தாமல், ஐயமில்லை; நம்மைவிட அவர்கள் உயர்ந்தவர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை!” என்று மேலும் கத்தினான் ராமமூர்த்தி.

‘என்னப்பா, இது? அவர்கள், இவர்கள்’ என்று அவளைப் பன்மையில் சுட்டிப் பேசத் தொடங்கி விட்டாய்! அப்படி என்ன கண்டுவிட்டாய், அந்தக் கடிதத்தில்? கொடு, இப்படி!’ என்று தம்பிக்குப் பதிலாக ‘அப்பாவைப் போட்டுக் கடாவினார், டாக்டர்.

அதையும் பொருட்படுத்தாமல், ‘உய்வில்லை; எவரா யிருப்பினும் தகுதி அறிந்து போற்றக் கற்றுக் கொள்ளும் வரையில் இந்தத் தமிழ் நாட்டுக்கு உய்வேயில்லை!” என்று மேலும் மேலும் கத்தினான்ராமமூர்த்தி.

‘இது என்னக் கூற்று! இவனும் நம்மோடு சேர்ந்து, தமிழ் நாட்டைத் தட்டித் துங்க வைப்பான் என்று பார்த்தால், இவன் அதைத் தட்டி எழுப்புவதற்குப் பதிலாகக்கத்தியே எழுப்பி விடுவான் போலிருக்கிறதே?” என்று நினைத்த டாக்டர் நெடுமாறன், தமக்குள் எழுந்த ‘சினமெனும் தீ'யைத் தமக்கே உரித்தான ‘ஐஸ்-கிரீம் சிரிப்'பால் அணைத்து, ‘தம்பி!’ என்று அவன் தோளைப் பற்றினார்.

அவ்வளவுதான்; ‘பாவிகள் டாக்டர், அந்தத் தெய்வத்துக்கு முன்னால் நாமெல்லாம் பாவிகள் டாக்டர்’ என்று கதறிக்கொண்டே அவருடைய மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விட்டான் அவன்!