பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 விந்தன்

‘சின்னத்தனமா!’

‘இல்லாமல் என்னவாம்? - கடற்கரையில் நீங்கள் பெருந்தனத்துடன் கூறினர்களே, கடிதத்தில் ஒருவேளை நாம் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கலாம்’ என்று?”

“எதற்கும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக நான் அவ்வாறு சொன்னேன்; அது தவறா?’

‘அது தவறாயில்லாமலிருக்கலாம். ஆனால், நல்லவர்களைப் பற்றி நீங்கள் தவறாகச் சிந்திப்பது தவறு என்கிறேன் நான்!”

‘நல்லவர்கள், நல்லவர்கள், நல்லவர்கள்! நல்லவர் களாயிருப்பதை விட வல்லவர்களாயிருப்பது தான் வாழ்வாங்கு வாழ வழி, தம்பி!’

‘'எது வல்லது, இந்த ஈனத்தனமா வல்லது? இல்லை; இல்லவேயில்லை - செய்த தவறைத் தைரியமுடன் ஏற்றுக் கொண்டு செயலாற்றுவதே வல்லது!”

“இருக்கலாம், எழுத்திலும் பேச்சிலும்!”

‘உண்மை; முற்றிலும் உண்மை! - இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயஞ் செய்து விடல்’ என்ற குறட்பாவுக்கு நம்மால் விளக்கம் தரத்தான் முடிகிறது; விரிவுரை நிகழ்த்தத்தான் முடிகிறது . அதன்படி நேற்று வாழ்ந்துகாட்ட, இன்று இறந்து காட்ட அதோ, உங்கள் சட்டைப் பைக்குள் இருக்கிறதே ஒரு கடிதம் - அந்தக் கடிதத்துக்குரிய தெய்வத்தால்தான் முடிந்திருக்கிறது!”

‘இல்லை; அவள் இன்னும் இறந்து காட்டவில்லை - அதற்குள் நீ அவளைக் கோயில் கட்டிக் கும்பிடத்