பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

5. இப்படியும் ஒர் இயற்கையின் செல்வன்

"ஒரு வீட்டை வெளிச்சமாக்க எத்தனையோ விளக்குகள், ஒரு தெருவை வெளிச்சமாக்க எத்தனை எத்தனையோ விளக்குகள், ஒர் ஊரை வெளிச்சமாக்க எத்தனை எத்தனை எத்தனையோ விளக்குகள்! - ஆனால் கடவுள்? - ஒரே ஒரு விளக்கைக் கொண்டு இந்த உலகத்தையே வெளிச்சமாக்கி விடுகிறார்!” என்றான் கிழவன், வானத்தில் பவனி வரும் வளர்மதியை நோக்கி வியந்தவனாய்.

   எதிலும் கடவுளைக் காணும் அவனுடைய இயல்பு நறுமணத்துக்குப் புதிதாக மட்டும் இருக்கவில்லை; புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. இவரைப்போலவே தானும் எதிலும் கடவுளைக் காண ஆரம்பித்துவிட்டால் எந்தக் கவலையும் தன்னைப் பாதிக்காது போலிருக்கிறதே? என்று அவள் நினைத்தாள். ஆனால் அதற்குரியப் பக்குவம் தனக்கு உண்டா? அவரைப் போலவே தானும் எதிலும் கடவுளைக் காண்பது சாத்தியமா?. அப்படியேக் கண்டாலும் அதனால் தன் மனப் புண்ணை ஆற்றிக் கொண்டு விட முடியுமா?. ஏன் முடியாது? புராண இதிகாசங்களிலே அதற்கு எத்தனை எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றனவே! - அவற்றில் காணும் சில காட்சிகள் கருத்துக்கு ஒவ்வாத தாயிருக்கலாம். காலத்துக்கு ஒவ்வாததாயிருக்கலாம். ஆனால் வருடம், மாதம், தேதி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக அவை வரலாறு இல்லை என்று தள்ளிவிட முடியுமா? ஒன்றில்லாமல் ‘ஒன்று பிறப்பதில்லை' என்பது உண்மையானால், அவற்றில் காணும் அந்த 'ஒன்று' ஏன் வரலாறா யிருக்கக்கூடாது? - பார்க்கப் போனால் எதில்தான் பொய் இல்லை? - வருடம், மாதம், தேதியிட்ட வரலாறுகளில்