பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடத்தான் 'அங்கிங்கெனாதபடி' பொய் நிறைந்திருக்கிறது. இதில் கட்சிப் பொய், அரசியல் பொய் என்றால், அதில் மதப்பொய், சமயப் பொய்! - வித்தியாசம் அவ்வளவுதானே?

  தாழம்பூ கொண்டு வந்து வைத்த வெற்றிலைத் தட்டைக் கூடக் கவனிக்காமல் ஏதோ யோசனையில் ஆழ்ந்துவிட்ட நறுமணத்தை நோக்கி, ‘என்ன அம்மா! யோசனையில் ஆழ்ந்துவிட்டாய்?” என்றான் கிழவன்.
  "ஒன்றுமில்லை; எதிலும் கடவுளைக் காணும் உங்களுடைய இயல்பை எண்ணிப் பார்த்தேன்!"
  "உனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?”
  "உண்டு; ஆனால்..."
  “ஆனால் என்ன, அம்மா?”
  "நன்றாயிருக்கும்போது கடவுளை நினைக்க மாட்டேன்; கெட்டுவிட்டால் நினைப்பேன்; நிந்திப்பேன்!” என்றாள் அவள், வெட்கத்துடன்.
  கிழவன் சிரித்தான்; சிரித்து, “அப்போதெல்லாம் கடவுள் என்ன செய்வார், தெரியுமா? - சிரிப்பார்; என்னைப் போலத்தான் சிரிப்பார் - எப்படி? - தன்னுடைய குழந்தையின் அசட்டுத்தனத்தைக் கண்டு, அதன் தாயார் சிரிப்பது போல!” என்றான்.
  தன்னை வைத்துக் கடவுளைப் பார்க்கும் அந்தக் கிழவனின் தன்மையைக் கண்டபோது, "தன்னை அறிந்தவன் கடவுளை அறிந்தவனாவான்' என்று தான் எங்கோ படித்தது நறுமணத்தின் நினைவுக்கு வந்தது. தான் படித்துத் தெரிந்து கொண்ட விஷயத்தை இவர் எப்படிப் படிக்காமல் தெரிந்து கொண்டார்? ஒரு வேளை கேள்வி ஞானமாயிருக்குமோ?

ud. idir – 5