பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 விந்தன்

போன தாழம்பூ சும்மா போகாமல் கயிற்றுக் கட்டிலைக் கொஞ்சம் பின்னால் இழுத்து விட்டுவிட்டுப் போயிருந்தாள், அத்தான் கீழே விழுந்தார்!

‘தோல்வியில் மகிழ்ச்சியைக் காண்கிறார்; என் அத்தான் தோல்வியில் மகிழ்ச்சியைக் காண்கிறார்!” என்று கத்தினாள் தாழம்பூ, அவன் தன்னைத் துரத்தினால் ஒடுவதற்குத் தயாராகிக்கொண்டே.

“இனி உன்னை நான் சும்மா விடப் போவதில்லை!” என்று வெஞ்சினம் கூறிக்கொண்டே எழுந்து அவளை விரட்டினார் அத்தான். அவள் ஒட, இவர் ஒட, இருவரும் கிழவனையும், நறுமணத்தையும் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.

‘நில்லுங்கள்; நீங்கள் அவளைச் சும்மாதானே விடப் போவதில்லை? பேசாமல் கல்யாணம் செய்துக் கொண்டு விடுங்களேன்!” என்றாள் நறுமணம், சிரித்துக்கொண்டே.

அவ்வளவுதான்; அவன் வாயெல்லாம் பல்லாக உட்கார்ந்து, ‘இவர்களை யார் என்று எனக்குச் சொல்லவே யில்லையே?’ என்றான் கிழவனிடம்.

‘நானே அந்தக் குழந்தையை யார் என்று இன்னும் கேட்கவில்லையே?’ என்றான் கிழவன்.

‘கேட்காமலா இந்த வீட்டில் இவ்வளவு துரம் இடம் கொடுத்து வைத்திருக்கிறீர்கள், இவர்களுக்கு? - மடமை, மடமையிலும் மடமை! - யார், என்ன, ஏது என்று கேட்காமல் இந்தக் காலத்தில் ஒருவருக்காவது, இப்படி உதவுவதாவது? மடமை; மடமையிலும் மடமை!’

‘அப்பா, புத்திசாலி! உனக்குக் கண் என்று ஒன்று இருக்கிறதோ, இல்லையோ?” என்றான் கிழவன்.

‘இருக்கிறது!” என்றான் தறுதலை.

ருககறது ற