பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 விந்தன்

‘புத்திசாலிகளாக இருந்துவிட்டுப் போகிறோம்; நீங்கள் மட்டும் அவர் சொல்வது போல் மடமையிலேயே உழன்று கொண்டிருங்கள்; அது தான் மனித குலத்துக்கு rேமம்’ என்றாள் நறுமணம்.

‘ஒழியப் போவதில்லை; திராவிட நாடு கிடைத்தா லொழிய இந்த மடமைகளெல்லாம் மக்களை விட்டு ஒழியப் போவதே இல்லை!” என்று முழங்கிக் கொண்டே எழுந்தான் தறுதலை.

‘உட்காருங்கள் ஐயா, உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்!” என்றாள் நறுமணம்.

‘கதையா, என்ன கதை?’ ‘உங்களைப்போன்ற ஒரு புத்திசாலியின் கதை’ ‘சொல்லுங்கள்; கேட்போம்?” தறுதலை உட்கார்ந்தான்; நறுமணம் சொன்னாள்:

‘ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு பேராசிரியர்; அந்த ஒரே ஒரு பேராசிரியருக்கு ஒரே ஒரு காதலி - அதாவது, அந்த ஒரே ஒரு காதலிக்குத் தெரிந்து, தெரியாமல் எத்தனையோ? - அந்த ஒரே ஒரு காதலியுடன் ஒரே ஒரு பேராசிரியர் இருந்தபோது, ஐயா, பசி, பசியில் பிராணனே போய்விடும் போலி ருக்கிறது . ஒரு பிடி அன்னம் கொடுங்கள், ஐயா!’ என்று கதறிக்கொண்டே ஒரு வழிப்போக்கன் வந்தான். நீ யார்? எந்த ஊர்? ஏன் இந்த நிலை?” என்று கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டார் பேராசிரியர். எல்லாவற்றுக்கும் தட்டுத் தடுமாறி அவன் பதில் சொன்னான் - தான் ஒர் உழவன் என்றும், தன்னுடைய ஊர் அரக்கோணம் என்றும், தான் நம்பி வந்த ஆள் தற்போது நகரில் இல்லாததால் தனக்கு இந்த நிலை என்றும் அவன் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கச் சொன்னான்