பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 73

பேராசிரியர்தான் புத்திசாலியாயிற்றே! அதிலும், சாதாரண புத்திசாலியா? ஆண்டுக்கு ஆண்டு ஆயிரம் புத்திசாலிகளைத் தயார் செய்யும் egy LJ TIJ புத்திசாலியாயிற்றே! அத்துடன் விடுவாரா, அவனை? செருமிக் கனைத்துத் தொண்டையைச் சரிசெய்து கொண்டு ஆரம்பித்தார் - ‘அயலூரிலிருக்கும் ஒருவரை நாம் பார்க்கவேண்டும்; அவரைப் பார்ப்பதற்காக நாம் சொந்த ஊரிலிருந்து கிளம்புகிறோம் - கிளம்புவதற்கு முன்னால் என்ன செய்ய வேண்டும்? பயணத்துக்கு வேண்டியவற்றை யெல்லாம் எடுத்துக்கொண்டு விட்டோமா என்று ஒரு முறைக்கு இரு முறை பார்க்க வேண்டும். அதாவது, பெட்டி - படுக்கை இருக்கிறதா என்று கவனித்தால் மட்டும் போதாது; அதற்குள் பற்பொடி, எண்ணெய், சீப்பு, கண்ணாடி, துண்டு, துப்பட்டி, ஒன்றுக்கு இரண்டு சட்டை, ஒன்றுக்கு இரண்டு வேட்டி எல்லாம் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். அதற்குப் பின் பெட்டியைப் பூட்டிச் சாவியை எடுத்து'’ - இதற்கு மேல் அவருடைய போதனையைக் கேட்க அந்த அப்பாவிக்குக் கொடுத்து வைக்கவில்லை; ‘'என் ஆவியை எடுத்து விட்டீர்களே, ஐயா!’ என்று அலறிக்கொண்டே விழுந்துவிட்டான், கீழே!”

இந்த இடத்தில் கதையை நிறுத்திவிட்டுத் தறுதலையைப் பார்த்தாள் நறுமணம்; அப்புறம் ? . என்றான் அவன்.

‘அப்புறம் என்ன? - இவனுடைய பிரேதத்தை இங்கிருந்து அகற்றுவது எப்படி? போலீசுக்காவது போன்’ செய்யட்டுமா?’ என்று கேட்டாள் காதலி. மடத்தனமாக எதையும் செய்யாதே முதலில் அவன் சட்டைப் பைக்குள் பதினைந்து காசுகள் இருக்கிறதா என்று பார்; இருந்தால் அதைத் தொலைபேசி'க்குரிய கட்டணமாக எடுத்துக் கொண்டு, அதற்குப் பின் காவலர்களுக்கு அழைப்பு விடு!"