பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

நினைப்பவர்களுக்காகத்தானோ என்னவோ, பதினைந்து வருடங்களுக்கு முன்பே ஆசிரியர் கல்கி அவர்கள் எழுதினார்கள்.

‘விந்தன் கதைகளைப் படிப்பதென்றால் எனக்கு எப்போதும் மனத்திலே பயம் உண்டாகும். படித்தால் மனத்திலே என்னென்ன விதமான சங்கடங்கள் உண்டாகுமோ, எப்படிப்பட்ட வேதனைகளுக்கு ஆளாக நேருமோ என்றுதான் பயம்!...

ஏழை எளியவர்கள் வாழ்க்கையிலுள்ள சுக சந்தோஷங் களைப் பற்றியும் அவர் எழுதுகிறார்: அவர்களுடைய துன்ப வேதனைகளைப் பற்றியும் எழுதுகிறார்.

ஆனால் படிப்பவர்களின் உள்ளத்தில் துன்பமும் வேதனையும்தான் அதிகமாக நிலைபெற்று உறுத்திக் கொண்டிருக்கும்.

அவருடைய கதாபாத்திரங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கெல்லாம் தாம்தான் காரணமோ என்று எண்ணி எண்ணித் தூக்கமில்லாமல் தவிக்க நேரும்.

அவ்விதம் வாசகர்களின் மன அமைதியைக் குலைக்கக் கூடிய இயல்பு வாய்ந்த கதைகள் தான் உண்மையான இலக்கியம் என்று தற்காலத்து இலட்சிய புருஷர்களும் இலக்கிய மேதாவிகளும் சொல்கிறார்கள்.

இது உண்மையானால் விந்தனுடைய கதைகள் உண்மையான இலக்கியம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.”

இதிலிருந்து என்ன தெரிகிறது?... இன்று மட்டுமல்ல; அன்றும் என்னுடைய கதைகளில் நடமாடிக் கொண்டிருந்த கதாநாயகர்களும் இந்த உலகத்திலுள்ள பலரைக் கோடிட்டுக் காட்டுபவர்களாயிருந்ததோடு, படிப்