பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 77

இல்லாவிட்டால் போகட்டும் இது தன் சுதந்திர வாழ்விலே அவள் கண்ட முடிவு!

அந்த முடிவை எதை முன்னிட்டும் மாற்றிக் கொள்ள விரும்பாத அவளுடன் போர், போர், போர் என்று போரிட்டுப் பார்த்தார், அப்பா - வெற்றி கிடைப்பதாக இல்லை, அவருக்கு - எனவே, ‘சமாதானம், சமாதானம், சமாதானம்’ என்று அந்த ‘சமாதானத்துக்குத் தன்னுடைய சுயமரியாதை'யைப் பலி கொடுத்துவிட்டார்!

இந்த நிலையிலே பாட்டி என்ன செய்வாள், பாவம்! அதிலும், தனக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லாத மருமகன் வீட்டிலே இருந்து கொண்டு?

நல்ல வேளையாகச் சித்தி வந்து சேர்ந்ததும் அண்ணா தன் வாலைச் சுருட்டி வைத்துக் கொண்டு விட் , ரன் அம்மா இருந்தபோது அவன் அடித்த லூட்டி - அப்பப்பா!

ஒருநாள் அம்மாவுக்குத் தெரியாமல் அவன் சர்க்கரை டப்பாவைக் காலி செய்து கொண்டிருந்தபோது, ஏதோ வேலையாக அடுக்களைக்குள் நுழைந்த நான், “ஏண்டா இப்படிக்கூடச் செய்யலாமா?’ என்றேன்.

‘செய்யக்கூடாதுதான்; உன்னை விட்டுவிட்டு நான் இப்படிச் செய்யக் கூடாதுதான் - இந்தா பிடி!’ என்றான் அவன், எனக்கு முன்னால் ஒரு பிடி சர்க்கரையை எடுத்து நீட்டி.

ஆசை யாரை விட்டது? - ஒரு கைக்கு இரண்டு கைகளாக நீட்டி நான் அதை வாங்கி வாயில் போட்டேனோ இல்லையோ, ‘அம்மாம்மா, இங்கே வந்து பாரேன் காலி, சர்க்கரை டப்பாவே காலி’ என்று கத்த ஆரம்பித்துவிட்டான் அவன்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதைச் சொல்லவேண்டுமா, என்ன? - அவன் தலையிலே விழ