பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 விந்தன்

வேண்டியக் குட்டு என் தலையிலே விழுந்தது - நான் அழுதேன்; அவனோ சிரித்தான்;

அம்மாவின் ராஜ்யத்திலே அவ்வளவு போக்கிரிப் பிரஜையாயிருந்த அவன், சித்தியின் ராஜ்யத்திலேதான் எவ்வளவு சாதுப் பிரஜையாகி விட்டான்!

அன்று எதிலும் முதலிடம் அவனுக்கு, இன்று எதிலும் அவனுக்குக் கடைசி, கடைசி, கடைசிதான்!

மற்றவற்றில் கடைசியாயிருப்பதைப் பற்றி கவலைப் படவில்லை, அவன். ஆனால் இந்தச் சாப்பாடு விஷயத்தில் - அதிலுமா கடைசி? இதைச் சகிக்க முடியவில்லை அவனால்,

ஒருநாள் அவனுக்கு என்னத் தோன்றிற்றோ என்னமோ ‘பாட்டி; சித்திதான் எனக்கு முதலில் சோறு போட மாட்டேன் என்கிறார்கள். நீங்கள் கூட வா போடக்கூடாது?’ என்றான் பரிதாபமாக.

எப்படியிருக்கும், பாட்டிக்கு? - அவனையும் கூடத்தில் மாட்டியிருந்த அவனுடைய தாயாரின் படத்தையும் மாறி மாறிப் பார்த்தாள். பிறகு, ‘சரி வா; போடுகிறேன்!” என்றாள்.துணிந்து.

அவள் அடுக்களைக்குள் துழைந்து தட்டை எடுத்தாளோ, இல்லையோ - முப்பத்திரண்டாவது தடவையா முகத்துக்குப் பவுடர் பூசிக் கொண்டிருந்த சித்தி ஓடோடியும் வந்து, ‘அவ்வளவு தூரத்துக்கு வந்துவிட்டாயா, நீ?” என்று இரைந்து கொண்டே அவள் கையிலிருந்த தட்டை ‘'வெடுக்கென்று பிடுங்கி iசி எறிந்துவிட்டு, ‘என்னைக் கேட்காமல் அடுக்களைக்குள் நுழைய உனக்கு என்னடி, சொந்தம்? அப்படியே ஏதாவது சொந்தமிருந்தாலும் அதுதான் உன் பெண்ணோடு