பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 79

போச்சே இன்னும் உனக்கு இங்கே என்னடி வேலை? ம், நட நட முதலில் இந்த வீட்டை விட்டு வெளியே நட!’ என்று அவளை விரட்டியபடி வெளியே வந்தாள்.

நான் பேசாமல் இருந்திருக்கக் கூடாதா? - ‘சித்தி, சித்தி! உங்களுக்குத் தெரியாதா? இது பாட்டியின் வீடு, சித்தி!’ என்றேன். எனக்குத் தெரிந்த உண்மையை மறைக்கத் தெரியாமல் - ஆம், என் அம்மாவுக்கு அவள் சீதனமாகக் கொடுத்த வீடாம், அது

அவ்வளவுதான்; ‘'அப்படியானால் அவள் இங்கே இருக்கட்டும்: நான் போகிறேன்!” என்று கொடியின் மேல் கிடந்த புடவை, ஜாக்கெட்டுக்களையெல்லாம் எடுத்துச் சுருட்டிப் பெட்டிக்குள் அடைக்க ஆரம்பித்துவிட்டாள், அவள்!

நல்ல வேளையாக அந்தச் சமயத்தில் ஆபீஸிலிருந்து வந்த அப்பா நிலைமையை ஒருவாறு புரிந்துகொண்டு, ‘என்ன காமினி, என்ன நடந்தது?” என்றார், சித்தியை நெருங்கி.

‘வேறு என்ன நடக்க வேண்டும்? இது என் வீடு இல்லையாம். இவளுடைய பாட்டியின் வீடாம். இந்த வீட்டிலே இருக்க எனக்கு உரிமை கிடையாதாம்: இப்படியெல்லாம் சொல்கிறாள், உங்கள் பெண் என்றாள் அவள், விக்கலுக்கும் விம்மலுக்கும் இடையே.

அதற்குமேல் அப்பா சும்மா இருப்பாரா? - அவர் தான்.அவளை அடக்க முடியாமற் போகவே அடங்கிப் போகும் நிலைக்கு வந்துவிட்டவராயிற்றே? - “முளைக்கும் போதே விஷமத்தனத்தைப் பார், விஷமத்தனத்தை? இன்னொரு முறை அப்படியெல்லாம் சொன்னாயோ, தோலை உரித்து விடுவேன் ஜாக்கிரதை’ என்றார், என் பக்கம் திரும்பி.