பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 விந்தன்

இதைக் கேட்டதும் அண்ணா வியப்புடன், ‘ஆடு மாடுகளின் தோல்தான் எதெதற்கோ உபயோகமாகிறது என்கிறார்கள்: மனிதர்களின் தோல் எதற்கு உபயோக மாகிறது அப்பா?’ என்றான், அப்பாவை நெருங்கி.

‘எட்டிப் போடா, அதிகப் பிரசங்கி ‘ என்று அவனைப் பிடித்து அப்பால் தள்ளிவிட்டு, ‘அழாதே, காமினி, அழாதே’ என்று வழக்கம்போல் வாங்கி வந்த பூவை அவளுடைய தலையிலே வைக்கப் போனார், அப்பா - சமாதானத்துக்காகத்தான்!

ஆனால் அந்தப் பாழாய்ப்போன சமாதானத்துக்கும் இருவருடைய ஒத்துழைப்புமல்லவா வேண்டியிருக்கிறது? அது கிடைக்கவில்லை, அவருக்கு, ‘இது ஒன்று தான் குறைச்சல், எனக்கு!’ என்று அவர் கையிலிருந்த பூவைப் பிடுங்கி வீசி எறிந்துவிட்டு, ‘இந்த வீட்டில் ஒன்று நான் இருக்க வேண்டும் இல்லை, அந்தக் கிழவி இருக்க வேண்டும். இரண்டில் ஒன்று தீர்மானமாகும் வரை நீங்களும் வேண்டாம்; உங்கள் பூவும் வேண்டாம்!’ என்று கத்தினாள், அவள்.

‘இரைந்து பேசாதே காமினி, இறைந்து பேசாதே!’ என்று தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் அவர்.

மானம் வீட்டுக்குள் போனாலும், தெருவிலாவது போகாமல் இருக்கட்டுமே என்ற கவலை அவருக்கு - இந்தப் பலவீனத்தைத்தான் தன்னுடைய வெற்றியின் ரகசியமாகக் கொண்டுவிட்டாள் சித்தி!

இவையெல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல, புரிந்தும் புரியாததுபோல எங்களுக்காக இத்தனை நாட்கள் இருந்து வந்த பாட்டி இப்போது என்ன செய்வாள், பாவம்! - எங்கள் முகத்தைப் பார்த்தாள்; எங்களுடைய சித்தியின் முகத்தையும் பார்த்தாள் - பிறகு தனக்கென்று கொண்டு