பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 81

வந்திருந்த இரண்டு புடவைகளை எடுத்துத் தன்னுடைய பையிலே வைத்துக்கொண்டு, ‘'நான் வருகிறேன்; குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!” என்று தன் மருமகப்பிள்ளையிடம் சொல்லி விட்டு நகர்ந்தாள்.

அவர்கள் விட்டாலும் நாங்கள் விடுவோமா, அவளை பாட்டி, பாட்டி! எங்களை விட்டு விட்டுப் போகாதீர்கள், பாட்டி!’ என்று கத்திக் கொண்டே அவளுக்குப் பின்னால் ஒடினோம்; அவ்வளவுதான்: எங்கள் முதுகில் ‘பளார், பளார்’ என்று அறைந்து, தனக்கிருந்த ஆத்திரங்கள் அத்தனையையும் தீர்த்துக் கொண்டு விட்டார், அப்பா

‘இதுதான் குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் லட்சணமா?’ என்று கேட்டபடி, தன் கையிலிருந்த பையை iசி எறிந்துவிட்டு, ஒடோடியும் வந்து எங்களை அணைத்துக் கொண்டாள், பாட்டி

அவளுடைய அரவணைப்பிலே இருந்தபடி, நாங்கள் கலங்கியக் கண்களுடன் அப்பாவைப் பார்த்தோம் என்ன ஆச்சரியம், அவருடையக் கண்களும் அப்போதுக் கலங்கிக் கொண்டிருந்தன!

‘உங்களால் இவர்களைக் காப்பாற்ற முடியா தென்றால் இப்பொழுதே சொல்லிவிடுங்கள்; இவர்களையும் பெங்களுருக்கு அழைத்துக்கொண்டு போய் நான் காப்பாற்றிக் கொள்கிறேன், ‘ என்றாள் பாட்டி, மேலும் தொடர்ந்து.

‘இந்த வருஷம் பரீட்சை முடியட்டும்; பார்க்கலாம்!” என்றார் அப்பா.

‘அதுவரை உங்களுடைய கோபத்தைக் காட்ட வேண்டியவரிடம் காட்டுங்கள்; குழந்தைகளிடம்

td. iDss – 6