பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 83

அப்பா பெருமூச்சு விட்டபடி, ‘உங்கள் பாட்டி ஊருக்குப் போகும்போது உங்களுக்கு ஏதாவது காசு கொடுத்துவிட்டுப் போனாளா? என்றார், மெல்ல.

‘ஆமாம்; ஆளுக்கு ஒரு ரூபா கொடுத்துவிட்டுப் போனார்கள்!’ என்றேன் நான்.

‘எனக்குப் பன்னிரண்டு பைசா கடனாகத் தருகிறீர்களா, தலைவலி மாத்திரை வாங்க!’ என்றார் அவர் பரிதாபமாக.

‘உங்களிடம் பன்னிரண்டு காசுகள் கூடவா இல்லை?” என்றான் நம்பி, வியப்புடன்.

‘அதை ஏன் கேட்கிறாய், பஸ்ஸுக்குக்கூடக் காசில் லாமல் சாயந்திரம் ஆபீஸிலிருந்து நடந்தே வந்தேன்!”

‘அப்படியானால் இந்த ரூபாயை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்!’ என்று தன்னிடமிருந்த ஒரு ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டான் அவன்.

‘உனக்கு?’ என்றார்.அப்பா. ‘என்னிடமுள்ள ஒரு ரூபாயில் நான் அவனுக்கு ஐம்பது பைசா கொடுத்து விடுகிறேன்; எங்களுக்கு வேண்டிய தெல்லாம் ஆளுக்கோர் ஐஸ்-கிரீம் தானே?” என்றேன் நான், சிரித்துக்கொண்டே.

அப்பா சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டுத்துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வெளியே சென்றார், தலைவலி மாத்திரை வாங்கிக் கொண்டு வர.

‘ஏண்டா நம்பி, சாப்பிட வருகிறாயா?” என்றேன் நான்.

“ஊஹாம்’ என்றான் அவன்.

‘ஏனாம்?"