பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 விந்தன்

‘ஒஹோ’ என்று உறுமிவிட்டு அவள் மேலே செல்ல, அப்பா ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு வெளியே சென்றார்.

எல்லா வேலைகளையும் ஒரு வழியாகச் செய்து முடித்துவிட்டு நான்நோட்டும் பென்சிலுமாக உட்கார்ந்தேன் கணக்குப் போட.

அப்போது அங்கே வந்த சித்தி, ‘அவ்வளவு பெரிய வளாகப் போய்விட்டாயா, நீ?” என்று நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக என் கன்னத்தில் ஒர் இடி இடித்து விட்டு, “அப்பா சாப்பிடுகிறேன் என்றால் என்னை எழுப்ப உனக்கு என்னக் கேடு?’ என்று கடுகடுத்தாள்.

‘எனக்குத் தெரியாது, சித்தி! இன்னொரு முறை இப்படி ஏதாவது நடந்தால் அவசியம் நான் உங்களை எழுப்புகிறேன்!” என்றேன் நான், குரல் தழுதழுக்க.

“அப்போதும் தூக்கத்தைக் கலைத்து விட்ட குற்றத்தி லிருந்து நீ தப்ப முடியாது!” என்றான் நம்பி குறுக்கிட்டு.

‘உன்னை யார் அழைத்தது, நடுவே?’ என்று அவன் கன்னத்திலும் ஒர் இடி இடித்துவிட்டு உள்ளே சென்றாள் சித்தி, தூக்கத்தைத் தொடர!

நாங்கள் இருவரும் கன்னத்தைத் தடவிக் கொண்டே நின்றோம். அப்போது தெருக் கதவைச் சாத்தித் தாளிட்டு விட்டு உள்ளே வந்த அப்பா, ‘என்னம்மா, என்ன நடந்தது?” என்றார், திடுக்கிட்டு.

‘ஒன்றும் நடக்கவில்லை அப்பா, பல்லை வலிக்கிறது!” என்றேன், நான்.

“பல் வலி கூட இருவருக்கும் சேர்ந்தாற்போல் வருமா என்ன?” என்றார் அப்பா, சிரித்துக்கொண்டே.