மனிதன் மாறவில்லை 87
‘வேறு வழியில்லை, அப்பா எங்கள் இருவருக்கும் சேர்ந்தாற்போல்பல் வலி வந்தால்தான் உங்களுக்கும் நல்லது; எங்களுக்கும் நல்லது!’ என்றான் நம்பியும் சிரித்துக் கொண்டே.
‘சரி, வரட்டும்!’ என்று சொல்லிக்கொண்டே படுக்கையை எடுத்து விரித்தார் அவர்.
‘பாட்டி இருந்திருந்தால் உங்களுக்கு இந்த வேலை யெல்லாம் இருந்திருக்காது, இல்லையா?’ என்று கேட்டுக் கொண்டே அவர் விரித்த படுக்கையில் படுத்தான் நம்பி.
‘அந்தக் கஷ்டம் இப்போதுதான் தெரிகிறது ஆயினும் என்ன செய்வேன்? - இந்த வீட்டில் எனக்கு ஒரளவாவது நிம்மதி கிடைக்க வேண்டுமென்றால் உங்கள் பாட்டி உங்களை விட்டுப் போகத்தான் வேண்டி யிருக்கிறது!” என்று சொல்லிக்கொண்டே, என்றும் இல்லாத திருநாளாக அப்பா நம்பிக்குப் பக்கத்தில் படுத்தார்.
அவ்வளவுதான்; ‘'இங்கே தனியாகப் படுக்க எனக்குப் பயமாயிருக்கிறது?” என்று உள்ளே இருந்தபடி குரல் கொடுத்தாள் சித்தி!
‘அட, கடவுளே! பாட்டி இல்லாததால் குழந்தை களுக்குத்தான் பயமாயிருக்குமென்று நினைத்தேன்; உனக்குமாபயமாயிருக்கிறது?” என்றார் அப்பா.
‘உங்கள் குழந்தைகளைப் பூனை தூக்கிக் கொண்டு போய்விடாது; இங்கே வாருங்கள்!’ என்றாள் அவள் தன்னை மறந்து
அதற்குமேல் என்ன சொல்வதென்றுத் தோன்ற வில்லை, அப்பாவுக்கு. அங்கேயும் போக முடியாமல்