பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 விந்தன்

தற்காலிகமான எங்களுடைய பிரிவு தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காவிட்டாலும், சித்திக்காவது மகிழ்ச்சி அளிக்கட்டும்; அந்த மகிழ்ச்சியிலே தாங்கள் எதிர்பார்க்கும் நிம்மதி ஒரளவாவது தங்களுக்குக் கிட்டட்டும்!

அன்புடன்.

நம்பி.

பின்குறிப்பு:

எந்தப் பழிக்குத் தாங்கள் அஞ்சிக் கொண்டி ருந்தீர்களோ அந்தப் பழியையும் இப்போது நாங்களே ஏற்றுக் கொண்டு விட்டோம் - இனி ஊராரோ, உலகத்தாரோ எங்களைப் பற்றித் தங்களைக் கேட்டால், ‘அவை என்ன சொன்னாலும் கேட்காமல் ஒடிப்போய் விட்டன!” என்று கூசாமல் சொல்லிவிடலாமல்லவா?

பெங்களுருக்குப் போய்ச் சேர்ந்த அன்றைக்கே இந்த ‘அதிகப் பிரசிங்கித்தனமான கடிதத்தை எழுதி அப்பாவுக்கு அனுப்பிவிட்டான். அவன் எல்லாம் நன்மைக்கே!’ என்று எண்ணித்தானோ என்னமோ, ‘இப்படிக்கூடச் செய்யலாமா?’ என்று கேட்டுக்கொண்டு அவர் எங்களைத் தேடி வரவில்லை; ‘மெளனம் சர்வார்த்த சாதகம்’ என்றுப் பேசாமல் இருந்துவிட்டார்.

<> <> <>

இது இப்படியிருக்க, அந்த வருஷம் எஸ்.எஸ்.எல்.ஸி., பரீட்சையில் தேறிவிட்ட என் அண்ணா கலாசாலையில் சேர்ந்தான். எட்டாம் வகுப்பை முடித்துவிட்ட நான் உயர்தரப் பள்ளியில் சேர்ந்தேன் - எல்லாவற்றுக்கும் உதவியாயிருந்தவள் என் பாட்டி மட்டுமல்ல; மாமாவும்தான்.

நல்ல வேளையாக அவர்கள் எங்களுடைய வயிற்றை வளர்த்ததோடு நிற்காமல், அறிவையும் வளர்த்தார்கள்!