பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 91

மாமி வேறு சித்தியைப்போல் இல்லாமலிருந்தது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பதாயிருந்தது.

அப்பா என்னுடைய ‘மஞ்சள் நீராட்டு விழா'வுக்கு வந்து போனவர்தான் - அதற்குப் பின் வரவில்லை; வர வேண்டிய அவசியமும் நேரவில்லை.

அவருடைய முயற்சிகள் எதுவும் இல்லாமலே என்னுடைய கல்யாணத்துக்கு வேண்டிய முயற்சிகளைத் தொடங்கினாள், பாட்டி - தான் கண்ணை மூடுவதற்குள் எப்படியாவது கல்யாணத்தைச் செய்து பார்த்துவிட வேண்டுமென்ற ஆசையில்.

ஆனால்...

அதைச் சொல்லவும் முடியவில்லை; சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை - பெண் வர்க்கத்தைப் பற்றிக் கேவலமாகப் பேசுகிறதே, ஆண் வர்க்கம் - அந்த ஆண் வர்க்கத்தைப் பற்றி நீங்களும் தெரிந்துக் கொள்ள வேண்டு மென்பதற்காகச் சொல்கிறேன்.

பார்க்கப் போனால் இதில் கேவலம் என்ன வாழ்கிறது. சோதனைகளுக்குள்ளேயே பெரிய சோதனை யாகக் கடவுள் இந்த உலகத்திலே பெண்ணைப் படைத்திருக்கும்போது?

ஆகா, இயற்கை அவளுக்கு அளித்துள்ள இனக் கவர்ச்சி தான் இந்த ஆண்களை எவ்வளவு ஈனத்தனமான காரியங்களிலெல்லாம் ஈடுபட வைத்து விடுகிறது!

பாவம், என் மாமா ஆம், அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது எனக்கு கடைசியில், அவர் என்மேல் காட்டிய அன்பெல்லாம் கசாப்புக் கடைக்காரன் ஆட்டுக் குட்டியின்மேல் காட்டிய அன்பாகவா போகவேண்டும்? - அட, கடவுளே!